எட்டுத்திக்கும் எதிர்ப்பு.. அடுத்தடுத்து களம் வரும் கட்சிகள்.. ஆளுநர் ரவிக்கு நெருக்கடி!
சென்னை: தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி நெருக்கடி கொடுத்து வருகின்றன.
பன்வாரிலால் புரோகித் பஞ்சான் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் ஆர்.என்.ரவி.
பதவியேற்ற சில வாரங்களிலேயே ஆளுநர் ரவிக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் பல்வேறு வகைகள் நீடித்து வருகின்றன.

மசோதாக்கள்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 தமிழர் விடுதலை மசோதா, நீட் எதிர்ப்பு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை அவர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவை கிடப்பில் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு எந்த முடிவும் எடுக்காததால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வெழுதி வருகிறார்கள்.

கடும் எதிர்ப்பு
இதேபோல் மற்ற மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இது அல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜகவினர் அடிக்கடி சந்தித்து தமிழ்நாடு அரசுக்கு எதிராக புகாரளிப்பது, இந்துத்துவம், சனாதனத்துக்கு ஆதரவாக பேசுவது, கல்லூரி விழாக்களில் அவர் தெரிவிக்கும் கருத்துகள் போன்றவை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழக சர்ச்சை
இதன் தொடர்ச்சியாக ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்தார். அத்துடன் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம், துணை வேந்தர்கள் கூட்டம், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் போன்றவை தமிழ்நாடு உயிர்கல்வித்துறைக்கு தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஆன்லைன் ரம்மி
இதனை அடுத்து பல்கலைக்கழக ஆளுநரை வேந்தராக நியமிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. அதேபோல் ஆன்லைன் ரம்மி செயலிக்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டசபையில் திமுக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் அண்மையில் அது காலாவதி ஆகியது. இதனால் ஆளுநர் மீதான எதிர்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

தொடரும் போராட்டங்கள்
இது போன்ற காரணங்களால் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஆளுநருக்கு எதிராக அடுத்தடுத்து போராட்டத்தை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்டு
அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக டிசம்பர் இறுதியில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் அதன் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஆன்லைன் ரம்மியை போன்று 20 க்கும் அதிகமான மசோதாக்களை ஆளுநர் ரவி முடக்கி வைத்து இருக்கிறார். ஆன்லைன் சூதாட்டை தடை செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று சொல்வது ஏன்? என்ன கேட்டாளும் ஆளுநர் மாளிகை பதிலளிப்பதில்லை. இது மக்களுக்கு துரோகம் செய்யும் செயலாக இருக்கிறது. எனவே ஆளுநரை திரும்பப்பெறக்கோரி போராட்டம் நடத்த உள்ளோம்." என அவர் எச்சரித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications