திமுகவின் பி டீம் பண்ருட்டியார்.. சசிகலா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்..ஜெயக்குமார் தாக்கு
சென்னை: அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக சசிகலா கூறுவது உண்மையல்ல என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். சசிகலா பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர். அவர் சொல்வது அத்தனையும் ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார். பண்ருட்டியார் திமுகவின் பி டீம் ஆக செயல்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை காசி மேட்டில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். நினைவஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், திமுகவில் இருந்து வந்தவர் இப்போது திமுகவின் பி டீம் ஆக செயல்படுகிறார் என்று ஜெயக்குமார் கூறினார். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மீண்டும் அதிமுக என்று வலம் வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து அடையாளம் காட்டியது அதிமுகதான். அந்த கட்சிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும். இன்றைக்கு நான் விஸ்வாசமாக இருக்கிறேன் என்றால் என்னை அடையாளம் காட்டியது அதிமுகதான்.
நான் சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து, உப்பில் இருந்து என் உடம்பில் ஓடும் ரத்தத்தில் இருந்து அனைத்திலும் கலந்துள்ளது அதிமுக. நான் சாகும் வரை அதிமுகவிற்கு விஸ்வாசமாகத்தான் இருப்பேன். அதேபோலத்தான் அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரனும் இருக்க வேண்டும். ஆனால் அவரோ அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என்று கூறுகிறார். அப்போது யாருடைய பி டீம் ஆக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்படுகிறார்? திமுகவின் பி டீம் போலத்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்படுகிறார் என்றும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
தயவு செய்து சொல்கிறேன் இனிமேல் அப்படி எல்லாம் பேசாதீர்கள். மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள் என்றும் ஜெயக்குமார் கூறினார். உங்களை வளர்த்த இயக்கத்தை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். அது தலைவருக்கும் அம்மாவிற்கும் செய்யும் துரோகம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சசிகலா கூறியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய ஜெயக்குமார், சசிகலா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று கூறினார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் சசிகலா என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். சசிகலாவை பொறுத்தவரை கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை சம்பந்தமும் இல்லை. பொய்யே உருவானவர் சசிகலா.
ரேசன் கார்டுகளுக்கு முன்பு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின் இன்று பொங்கல் பரிசாக 1000 ஆயிரம் தருகிறார். அதுவும் அனைவருக்கும் பணம் கிடைக்காது பொங்கல் பரிசு பணம் கொடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications