திமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி தொடர்புடைய அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (பிப்.26) டெல்லியில் வெளியிட்டார். இதில், தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், திமுகவின் திருச்சி மாநில மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், மார்ச் 7 அன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
அதேபோல், மார்ச்.14 அன்று திருச்சியில் நடைபெறுவதாக இருந்த திமுக மாநில மாநாடும் ஒத்திவைக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.

அதேசமயம், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் செயலாளர் துரைமுருகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் அமைத்துள்ள இந்த குழுவின் தலைவராக பொருளாளர் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக கே.என்.நேரு, இ.பெரியசாமி, க.பொன்முடி, திருமதி சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!











Click it and Unblock the Notifications