எப்படி ஊழல் செய்யனும்னு ஆ.ராசாவுக்கு தெரியும்.. பாஜகவுக்கு தெரியாது.. வானதி சீனிவாசன் தடாலடி!
சென்னை: 5G அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லும் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. இதில் மொத்தமாக 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் ரூ.1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது. அதில் அதிகபட்சமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ
அதேபோல் மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் - ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி, அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடியாகும்.

ஆ.ராசா குற்றச்சாட்டு
இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5 ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். 5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

சுதந்திர தினம்
இதற்கு பதிலலித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை அனைத்து வீடுகள், அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக பாஜக நிர்வாகிகள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மகளிரணி சார்பில் வந்தே மாதரம் பாடலை பாடி தேசிய கொடியை எந்தியவாறு விழிப்புணர்வு செய்ய உள்ளோம். இந்த 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல்வேறு கலைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார்.

வானதி சீனிவாசன் பதிலடி
தொடர்ந்து பேசிய அவர், நாட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை 5 ஜி அலைக்கற்றை ஏலம் பெற்று தந்துள்ளது. இதுபற்றி குறை கூறும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு தான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என்று தெரியும். 5G அலைக்கற்றையில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லும் ராசா, அதற்கான ஆதாரத்தை முன்வைக்கட்டும். அதுமட்டுமின்றி, இந்த பாஜக அரசு ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் 8 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications