திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும்: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரின் அஜெண்டா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவை மத்திய அரசு கொண்டு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், இதற்கு ' இந்தியா' கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதல்வர் மு.க ஸ்டாலினும் ஒரெ நாடு ஒரே தேர்தல் மூலம் அதிபர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என காட்டமாக நேற்று பேசினார். இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக நாடாளுமன்ற உறப்பினர்கள் கூட்டம் வரும் 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications