சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜய் வருவாரா.. திமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் தருவாரா.. நகர்த்தப்படும் காய்கள்.. தடாலடி காட்டுவாரா!?

விஜய்யை வைத்து ரஜினி ஓட்டுக்களை பிரிக்க திமுக திட்டமிடுவதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: இன்னும் கட்சியே அவர் ஆரம்பிக்கவில்லை... ஆனால் அதற்குள் விஜய்யை வைத்து ரஜினிக்கு செக் வைக்க திமுக யோசித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

விஜய் - ரஜினியை பொறுத்தவரை ஒருவருக்கொருவர் பாசம் காட்டியவர்கள்.. நெருக்கம் வைத்திருந்தவர்கள்.. இதை பல நிகழ்ச்சிகளில் நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது. ரஜினிகாந்த் வழியை பின்பற்றி வந்த விஜய்தான், இன்று அவருக்கு நிகரான அல்லது சமயங்களில் அவரை மிஞ்சி விட்டதாக ஒப்பிடப்பட்டு வருகிறார். இது விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமே என்றுதான் சொல்ல வேண்டும்!!

சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை விவகாரம் விஜய்யை தமிழகம் முழுவதும் அனுதாபத்துடன் பார்க்க வைத்தது. மேலும் சில ஒப்பிடுகளும் வெடித்துக் கிளம்பின. ஒன்று ரஜினிகாந்த் மீது வருமான வரி தொடுத்த வழக்கு வாபஸ் ஆனது.. மற்றொன்று அதே வருமான வரித்துறை விஜய் வீட்டில் ரெய்டு நடத்தியது!

நடிகர்கள்

நடிகர்கள்

விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு திமுக, காங்கிரஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.. பொதுவாக சினிமா நடிகர்களை பற்றி கருத்து சொல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட இந்த ரெய்டு நடத்திய விதத்தை தவறு என்றுதான் சொன்னது.. கடைசியில் இது மக்களவையிலும் எதிரொலித்தது. திமுக எம்பி தயாநிதி மாறன்தான் விஜய்க்கு ஆதரவாக கேள்விகளை எழுப்பியிருந்தார்.

திரையுலகம்

திரையுலகம்

விஜய்க்கு எதிரான ரெய்டு என்று திரையுலகிலும் சிலர் (சிலர் மட்டுமே) கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ரஜினியோ, கமல்ஹாசனோ இதுகுறித்து எதுவும் கண்டு கொள்ளவில்லை. இந்த சமயத்தில்தான் எஸ்ஏ சந்திரசேகர் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ய முயன்றார்.. இவ்வளவு காலம் ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென கடுகடு பேச்சுக்களை பேட்டியில் உதிர்த்தார்.. விஜய் விஷயத்தில் ஆரம்பித்து பெரியார் விஷயம் வரை ரஜினிகாந்த்தை தாறுமாறாக விமர்சித்தார்.

சந்தேகம்

சந்தேகம்

திடீரென இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்ற சந்தேகமும் எழுந்தது.. அப்போதுதான் விஜய்யை திமுகவில் ஒரு பொறுப்பில் உட்கார வைக்க எடுக்கும் முயற்சியாக கருதப்பட்டது. எப்படியும் இதையெல்லாம் கவனித்து திமுக அழைப்பு விடுக்கும் என்றுகூட எதிர்பார்த்தார் போலும். இதனை திமுகவும் கவனிக்கவே செய்தாலும், விஜய்யை உள்ளே கொண்டு வர விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது.

திமுக

திமுக

இதற்கு காரணம், ஏற்கனவே கட்சிக்குள் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளது.. முக்கிய பொறுப்புகளுக்கு பல சீனியர்கள் காத்திருக்கிறார்கள்.. இதில் விஜய்யை உள்ளே கொண்டு வந்தால் அவருக்கு என்ன பொறுப்பு, பதவி தருவது என்ற யோசனையும் வந்ததாம். அதனால்தான் திமுக தயங்கியதாகவும், வேண்டுமானால் அவர் வெளியில் இருந்து ஆதரவு தரட்டும் என்று அவர்களுக்குள் ஒரு டாக் ஓடியதாம்! (விஜய் முதல்ல இவர்கள் கூப்பிட்டால் வருவாரான்னே தெரியலை.. அதற்குள் இப்படியெல்லாம் ஆலோசனையா!)

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஆனால், இப்போது நிலைமையே தலைகீழ்.. ரஜினிகாந்த் சாதி அரசியலை கணக்கு பண்ணி காய் நகர்த்த் வருகிறார்.. ஒரு பக்கம் உலமாக்களை சந்திக்கிறார்.. இன்னொரு பக்கம் நாராயணனை சந்திக்கிறார்.. நாளை ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்க போகிறார்.. இதையெல்லாம் பார்த்தால், நிச்சயம் அவர் கட்சி தொடங்கிவிடுவார் என்றே தெரிகிறது.. அதனால் ரஜினியை சமாளிப்பது எப்படி? குறிப்பாக அவருக்கு சேரவிருக்கும் வாக்குகளை பிரிப்பது எப்படி என்ற தீவிர யோசனையில் திமுக ஈடுபட்டு வருகிறதாம்.

பிரியும் ஓட்டுக்கள்

பிரியும் ஓட்டுக்கள்

உதாரணமாக ரஜினிகாந்த்துக்கு ஓட்டு போடுபவர்கள் யாராக இருக்கும் என்று ஒரு கணக்கு போட்டால், நிச்சயம், திமுக அதிமுகவை பிடிக்காதவர்கள்தான் அவருக்கு ஓட்டுபோட வாய்ப்பு உள்ளது.. அந்த ஓட்டைதான் விஜய்யை வைத்து பிரிக்க திமுக யோசிக்கிறது.. இதன்மூலம் அதிமுகவை ஆஃப் செய்ய முடியும், ரஜினிகாந்த்துக்கு செல்லவிருக்கும் ஓட்டுக்களையும் அலங்கோலப்படுத்த முடியும் என்பதே திமுகவின் கணக்கு என்கிறார்கள்.

விஜய் வாய்ஸ்

விஜய் வாய்ஸ்

அது மட்டுமல்ல தெரிந்தோ தெரியாமலோ ரஜினிக்கு இணையான செல்வாக்குடன் கூடியவர் விஜய்தான் என்று பரவலான கருத்து தமிழகத்தில் உள்ளது. பாஜகவுக்கு எதிரானவர் என்ற பிம்பமும் விஜய்க்கு விழுந்துள்ளது.. ஆகவே விஜய் வாய்ஸ் கொடுப்பது என்பது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள். விஜய் ரசிகர்கள் மொத்தமாக திமுக பக்கம் வாக்களித்தால் அது திமுகவுக்கு நிச்சயம் சாதகமான அம்சமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. இது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகூட லேசாக நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.. ஆனால் அதன் விவரங்கள் என்ன என்று இன்னும் தெரியவில்லை.

மாஸ்டர்

மாஸ்டர்

இருப்பினும் விஜய்க்கு இந்த அரசியல் ஆசை எந்த அளவுக்கு உள்ளது என்பது விளங்கவில்லை.. ஆனால் அரசியலுக்கு வருவதற்குள் குறைந்தது 75 படத்தையாவது நடித்து முடித்துவிட வேண்டும் என்பதே விஜய்யின் எண்ணமாம். மாஸ்டர் அவரது 64வது படம் என்றாலும், 10 படங்கள் முடித்தபிறகுதான் விஜய்யின் நேரடி அரசியல் இருக்கும் என்கிறார்கள். 2021 தேர்தலை கணக்கு செய்து விஜய் அரசியலில் கால் வைக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது..

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

விஜய் வருவாரா.. திமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் தருவாரா.. அல்லது கப்சிப்பென்று இருந்து கடைசி நேரத்தில் தடாலடி காட்டி ரஜினி மட்டுமல்லாமல் திமுக உள்பட அனைவரையும் அதிர வைப்பாரா.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
DMK seems to be planning to split Rajinikanths's vote bank with actor Vijay
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X