சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவுடன் சமாதானமான அந்த 3 அதிமுக மாஜிக்கள்? விரைவில் சரண்டராகும் 5 முக்கிய தலைகள்? யார் அவர்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் உள்ள 5 பெரிய தலைகள் மட்டுமே வரத் தயங்குகிறார்கள் என சசிகலா தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரம் 3 மாஜிக்கள் தன்னுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளாராம்.

அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான சசிகலா தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவுக்கு தானே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என சசிகலா ஒரு புறமும், எடப்பாடி பழனிசாமி மறுபுறமும் துடித்து வருகிறார்கள்.

இதற்காக சசிகலா ஒரு பக்கம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அது போல் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை பொதுக் கூட்டம் நடத்தி சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தனியே செயல்பட்டு வருகிறார்.

இத்தனை கேமரா இருக்கே? மன்னார்குடி பக்கம் வீசும் 'மாஜி’ காற்று! போட்டுடைத்த சசிகலா! ஷாக்கான இபிஎஸ்! இத்தனை கேமரா இருக்கே? மன்னார்குடி பக்கம் வீசும் 'மாஜி’ காற்று! போட்டுடைத்த சசிகலா! ஷாக்கான இபிஎஸ்!

சசிகலா- தினகரன்

சசிகலா- தினகரன்

அவர் தற்போதே சசிகலா, தினகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்கேற்ப செய்தியாளர்கள் சந்திப்பில் கூட சசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பக்கம் போவதா ஓபிஎஸ் பக்கம் போவதா என தெரியாமல் தொண்டர்கள் விழித்து வருகிறார்கள்.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இதனால் சசிகலாவை தேடி அவரது வீட்டிற்கு ஆதரவாளர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அவர்களுடன் சசிகலா பேசி, "கவலைப்படாதீர்கள், நிச்சயம் கட்சி என் கைகளுக்கு வரும். அதுவரை இந்த அண்ணன் தம்பிகளின் சண்டைகளை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்" என அறிவுரை கூறி வருகிறாராம்.

வயிறார சாப்பாடு

வயிறார சாப்பாடு

அது போல் தினமும் தனது வீட்டிற்கு வருவோருக்கு வயிறார சாப்பாடு போட்டு அனுப்புகிறாராம். இந்த நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களை நேற்றைய தினம் தனது தி நகர் வீட்டில் சந்தித்து பேசியதாக ஒரு தகவல் உலா வருகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அந்த சந்திப்பில் சசிகலா மனம் விட்டு நிறைய பேசியுள்ளாராம்.

புத்துணர்வு பெற்ற ஆதரவாளர்கள்

புத்துணர்வு பெற்ற ஆதரவாளர்கள்

சசிகலாவின் பேச்சை கேட்ட ஆதரவாளர்கள் புது தெம்புடன் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களிடையே சசிகலா பேசுகையில், அவர் அணி இவர் அணி என பிரித்து பார்க்காதீங்க. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அது போல் கட்சி இரண்டு பட்டால் திமுகவுக்கு அது சாதகமாக போய்விடும்.

 15 நாட்களில்

15 நாட்களில்

அதிமுக தொடங்கப்பட்ட நாளை இன்னும் 15 தினங்களில் கொண்டாட போகிறோம். இந்த நேரத்தில் இது போல் அணிகள் பிரிந்திருப்பது சரியல்ல. அனைவரும் அதிமுக என்ற அந்த 4 எழுத்து மந்திரத்திற்காக பணியாற்றுங்கள். உழைப்புக்கேற்ற பலன் உங்களை தேடி வரும். ஓபிஎஸ் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அது போல் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 3 பேர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

5 பேர்

5 பேர்

அவர்களும் என் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன ஒன்று அந்த 5 பேர் மட்டும் முரண்டுபிடிப்பார்கள். பிறகு அவர்களும் தம் பக்கம் வந்துவிடுவார்கள் என தெரிவித்தாராம். இதனால் புதிதாக பிறந்தவர்கள் போல் சசிகலாவை சந்திக்க வந்தவர்கள் திருப்தியுடன் வெளியே சென்றுள்ளார்கள்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டோம்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டோம்

இதுகுறித்து சசிகலா ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மூத்த நிர்வாகியிடம் ஒன் இந்தியா சார்பில் கேட்டோம். அப்போது அவர் கூறுகையில், சின்னம்மா எங்களை எல்லாம் சந்தித்து உபசரித்து பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அவரது உபசரிப்பில் தொண்டர்கள் மீது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாசத்தையும் நாங்கள் கண்கூடாக பார்த்தோம் என்றார்.

அந்த 5 பேர் யாரு

அந்த 5 பேர் யாரு

பிறகு அந்த 5 பேர், அந்த 3 பேர் யாரென கேட்டோம். அதற்கு அந்த நிர்வாகி, அந்த 5 பேர் யாரென பெயர்களை கூற முடியாது, நீங்களாகவே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் சின்னம்மாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ அவர்கள்தான் என்றார். சரி அந்த 3 பேராவது சொல்லுங்கள் என்றதற்கு, அதுவும் சஸ்பென்ஸ்! யாரென சொல்ல முடியாது, ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், இக்கட்டான சூழல் வந்த போது உதவ யாருமின்றி தனித்து போராடியவர், அந்த மூவரில் ஒருவர் என்றார். ஆனால் அந்த 5 பேரும் மிக முக்கிய தலைகள் என கூடுதலாக கொசுரு தகவலையும் சொல்லிவிட்டு நம்மிடம் விடைபெற்றார் அந்த நிர்வாகி.

English summary
Sasikala conducts a meeting with cadres and said that 3 ex ministers were in touch with her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X