"வேட்டை" ஆரம்பம்.. தலைக்குமேல போயிடுச்சே.. திருமாவை விடுங்க.. திமுக உஷாராகணும்.. சொல்றது யார் பாருங்க
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜகவை ஒடுக்க திமுக தீவிரம் காட்ட வேண்டும் என்கிறார் பத்திரிகையாளர் மணி
சென்னை: பாஜகவை ஒரு பொருட்டாகவே, திமுக கருத வேண்டிய தேவையில்லை என திருமாவளவன் சொல்லியிருக்க கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி, நமக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன், நம் ஒன் இந்தியாவுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அப்போது, பாஜகவை திமுக காட்டமாக எதிர்கொள்ளவில்லையே? ஒருவித மென்மைப்போக்கு இருப்பதாக தெரிகிறதே என்று கேள்வி எழுப்பினோம்.
அதற்கு திருமாவளவன், பாஜக வம்புக்கு இழுப்பதை, ஆளும் கட்சியான திமுக கண்டுகொள்வதில்லை.. எதிர்வினையாற்றக்கூடிய அளவுக்கு பாஜகவுக்கு திமுக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்று கூறியிருந்தார்.
இந்த கேள்வியை மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணியிடம் முன்வைத்தோம்.. அதற்கு அவர் அளித்த பதில்தான் இவை

திருமாவளவன்
பாஜகவை ஒரு பொருட்டாகவே, திமுக கருத வேண்டிய தேவையில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்க கூடாது.. திருமாவளவன் ஏன் திமுகவுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறார்? ஆர்எஸ்எஸ் தலைக்குமேல வெள்ளம்போல போயிடுச்சு. பாஜகவை பற்றி கவலைப்படாமல் திமுக இருக்கவே முடியாது.. பாஜக, ஆர்எஸ்எஸை எதிர்கொள்வது என்பது மிகப்பெரிய கடினமான பணி. காரணம், அதற்கு மத்திய சர்க்காரின் உதவி உள்ளது.. மத்திய ஏஜென்சிகள், எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவதன் மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ்ஸின் ஊடுருவலுக்கு, கூச்சம் நாச்சமே இல்லாமல் மத்திய சர்க்கார் எல்லாவிதமான உதவிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள்..

ப்ராமிஸ்
நீதித்துறையில் உள்ள சில விரும்பத்தகாத போக்குகள், ஆர்எஸ்எஸ் வளர்ச்சிக்கு வழிவிட்டு கொண்டிருக்கின்றன.. சில நாட்களுக்கு முன்புகூட, கர்மாவின் அடிப்படையில் தீர்ப்பை ஒன்றை பெண் நீதிபதி ஒருவர் வழங்கினார்.. இந்த உத்தரவுக்கு ஸ்டே வாங்கப்பட்டுள்ளது என்றாலும், இது எவ்வளவு பெரிய அபாயம்? இந்திய அரசியலமைப்பு சாசனத்தின்பால் உறுதிமொழி எடுத்துக்கொண்ட ஒரு நீதிபதி, சட்டத்திற்கு உட்பட்டு இந்திய சாசனத்திற்கு உட்பட்டு, இந்திய குற்றவியல் நடைமுறை நீதிமன்றத்துக்கும், இந்திய தண்டனை சட்டத்துக்கும் உட்பட்டும் மட்டும்தான் தீர்ரப்பு வழங்கவேண்டிய ஒரு நீதிபதி, கர்மாவின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்குகிறார் என்றால், இது எவ்வளவு பெரிய அபாயகரமான போக்கு?

கேள்வி 1
அந்த நீதிபதி மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏன் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள், அரசியல் கட்சிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்? அறிக்கைகூட விடலையே? இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், பெரும்பான்மை இந்துத்துவா ஊடுருவி உள்ளது என்பதற்கு இது தீர்ப்பு ஒரு உதாரணம்.. அந்த நீதிபதி இனனும் பணியில் இருக்கிறார்.. இந்த முறையில்தான் ஆர்எஸ்எஸ்ஸை அணுகி பார்க்க வேண்டும்.. அது ஒரு சித்தாந்தம்.. தனி நபர் அல்ல.. 97 வருடமாக இந்தியாவை சர்வநாசம் செய்திருக்கும் அமைப்பு அது..

கேள்வி 2
மகாத்மா கொலையில் நடந்தது ஊரறிந்த விஷயம்.. குஜராத் கலவரத்தில் அவர்கள் ஆற்றிய அருட்பணிகள் காலத்தால் மறக்க முடியாதவை.. பாபர் மசூதி இடிப்பில் அவர்கள் செய்த காரியங்களை வரலாறு மன்னிக்காது, மறக்காது.. இன்னைக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத் என்ன சொல்கிறார்? மதத்தை விட்டுவிட்டு அரசியலை பார்க்க முடியாது, முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிக்கிறது என்ற தொனியில் பேசுகிறார்.. இதே பகாவத், 10 நாளைக்கு முன்னாடி, மதராஸாவுக்கு சென்று மாணவர்களிடம் பேசிவிட்டு வந்தார்.. ஒரே நேரத்தில் 9 விதமாக அவதாரங்களை எடுப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்..

97 + அவதாரம்
இப்படிப்பட்ட சித்தாந்தம், நிச்சயம் வளரும்.. இந்த சித்தாந்தத்தை இன்னொரு சித்தாந்தத்தின் மூலம்தான் உடைக்க முடியும்.. 97 வருட காலம் ஆகியும் அந்த அமைப்பை யாராலும் உடைக்க முடியவில்லை.. அதேகாலகட்டத்தில் வளர்ந்த திராவிடர் கழகம் உடைந்துவிட்டது.. கம்யூனிஸ்ட் கட்சிகளும் உடைந்தது.. ஆனால் ஆர்எஸ்எஸ் உடையவில்லை.. அப்படியானால் அது எவ்வளவு ஆபத்தான இயக்கம்? என்பதை திமுக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு!












Click it and Unblock the Notifications