சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்

தன்னுடைய குலதெய்வம் கோயிலில் வழிபட்டு, பூப்போட்டு பார்த்தாராம் ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

சென்னை: நடக்க போகும் இத்தேர்தல், ஓபிஎஸ் தரப்புக்கு மிகுந்த நெருக்கடியாக மாறி உள்ளதாக கூறப்படுகிறது.. தன்னுடைய ஆதரவாளர்களிடம் தொடர் ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வரும்நிலையில், அதுதொடர்பான ஒருசில விஷயங்கள் தற்போது கசிந்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு லிஸ்ட்டை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது... இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதையடுத்து, தங்கள் சார்பிலான வேட்பாளரை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.. அநேகமாக இன்று இரவுக்குள் வேட்பாளரை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 யாரும் நெருங்கக்கூட இல்லை.. 9 ஆண்டுகளுக்கு பிறகும் டாப் இடத்தில் பிரதமர் மோடி.. வெளியான புது சர்வே யாரும் நெருங்கக்கூட இல்லை.. 9 ஆண்டுகளுக்கு பிறகும் டாப் இடத்தில் பிரதமர் மோடி.. வெளியான புது சர்வே

பலப்பரீட்சை

பலப்பரீட்சை

அதிமுகவில் நிலவும் குழப்பத்தால் இடைத்தேர்தலில் தங்களது வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டாலும், எந்த முடிவையும் பாஜக அறிவிக்காமல் உள்ளது.. "எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி. இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரீட்சை கிடையாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 13 மாதங்களில் வரப்போகிறது. நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரே மனவருத்தத்தில் உள்ளார்" என்று அண்ணாமலை 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்..

சூசகம்

சூசகம்

அதாவது, "அதிமுக சார்பில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்து உள்ளதன் மூலம், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட மாட்டார் என்று அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளதாகவே கருதப்பட்டு வருகிறது.. இதனிடையே, ஓபிஎஸ்ஸும் களமிறங்கி உள்ளார்.. ஆனால், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தர தயார் என்றும் ஓபிஎஸ் சொல்லி உள்ளார்.. எனினும் நடக்க போகும் இந்த இடைத்தேர்தல் டென்சன் ஓபிஎஸ்சை பயமுறுத்தி வருவதாக சொல்கிறார்கள்.

நாசூக்கு மூவ்

நாசூக்கு மூவ்

இந்நிலையில், குல தெய்வம் கோவிலில் வழிபட்டிருக்கிறார். பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்துவிட்டு ஒதுங்கி கொள்ள திட்டமிட்டிருந்தார் ஓபிஎஸ்.. பாஜகவோ தனது நிலைப்பாட்டை தெரிவிக்க நாள், நட்சத்திரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. போட்டியிடுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஓபிஎஸ்சிடம் அண்ணாமலை ஏற்கனவே நாசூக்காக தெரிவித்து விட்டாராம்.. இருந்தாலும், டெல்லி தரப்பிலிருந்து உறுதியாக தெரிவிக்கப்படாததால், கடைசி நேரத்தில் மனசு மாறி தேர்தலில் போட்டியிட மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் ஓபிஎஸ்.

பூப்போட்ட ஓபிஎஸ்

பூப்போட்ட ஓபிஎஸ்

அதையெல்லாம் மறைக்கும் விதத்தில், "நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் " என்று சொல்லி வருகிறாராம்.. ஒருவேளை பாஜக போட்டியிடவில்லை என்றால், வேட்பாளரை அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஓபிஎஸ்சை கவ்விக் கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அப்படியே தன்னுடைய குல தெய்வமான செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வணங்கிவிட்டு வந்துள்ளார் ஓபிஎஸ்.. முக்கிய முடிவுகளை எடுக்கும் போதும் சரி, முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தடுமாறும் போதும் சரி, தன்னுடைய குல தெய்வ கோவிலில் வழிபாடு நடத்தி ரகசியமாக பூ போட்டுப் பார்ப்பதை ஒரு ஐதீகமாக வைத்திருக்கிறாராம் ஓபிஎஸ்.

வெள்ளை பூ

வெள்ளை பூ

அந்த வகையில்தான், வரப்போகும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பூ போட்டுப் பார்த்துள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களை வைத்து குல தெய்வத்திடம் சம்மதம் கேட்டுள்ளார் ஓபிஎஸ்.. மூன்று முறை பூ போட்டுப் பார்த்ததில், மூன்று முறையும் வெள்ளைப் பூவே வந்ததாம்.. அதன்படி, வேட்பாளரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று குலதெய்வமான பேச்சியம்மனே க்ரீன் சிக்னல் தந்துவிட்டாள் என்று குதுகலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறாராம் ஓபிஎஸ் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

English summary
Do you know why OPS went to Pechiamman Temple and What is TN BJP's decision on by-elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X