வேகமாக பரவும் இன்புளுயன்சா.. என்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது?.. மருத்துவர்கள் அட்வைஸ் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மாநிலம் முழுவதும் இதுவரை 1,044 பேர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

தற்போது காய்ச்சல் அச்சம் மேலும் அதிகரித்து வருவதால் காய்ச்சல் தடுப்புமுறை குறித்து மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இது பொதுவான அறிவுரை மட்டுமே என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பரிசோதனைக்கு பின்னர் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 பரவல்

பரவல்

லேசான காய்ச்சல், லேசான சளி பாதிப்பு ஆகியவை மூலம் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். ஆனால் சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் இருக்கும். பருவநிலை மாற்றம் காரணமாக இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுகிறது. இது இருமல் மற்றும் சளி மூலமாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவுகிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரவும் காய்ச்சல் கோடைக்காலம் தொடங்கும் வரைகூட இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயம் வேண்டாம்

பயம் வேண்டாம்

அதேபோல இந்த காய்ச்சல் குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து வயதினரிடத்திலும் பரவும். எனவே காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? பாதிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் விளக்கமாக கூறியுள்ளனர். "இந்த காய்ச்சலை கண்டு முதலில் பயப்படக்கூடாது. இந்த வகை காய்ச்சல் கடந்த 2018லிருந்து தமிழ்நாட்டில் இருந்து வருகிறது." என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

அவர்கள் மேலும் கூறியதாவது, "இந்த காய்ச்சல் 3-4 நாட்களுக்குள் சரியாகிவிடும். அதேபோல காய்ச்சல் அறிகுறியுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அதேபோல கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதாவது, மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது என அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

 தடுப்பூசி

தடுப்பூசி

அதேபோல லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதேபோல, தீவிர பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வேறு மருந்து இருக்கிறது. எனவே அவர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசியும் உண்டு. ஆனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் மாறும் வானிலையை பொறுத்து வைரஸ் உருமாற்றம் அடையும்.

எனவே இதனை கணக்கில் கொண்டு தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டுக்கும் தடுப்பூசி புதியதாக தயாரிக்கப்படும். இந்த தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்படாது. குழந்தைகள், முதியவர்கள் என அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+