சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கவனிச்சீங்களா.. கோபம், தயக்கம்.. "டோட்டலாக" மாறிய ஸ்டாலின்.. அச்சுஅசல் "அவரை" போலவே.. குஷியில் திமுக

ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன என்ற விவாதம் நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும், இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன? வேற்றுமைகள் என்ன? கருணாநிதியை போலவே, ஸ்டாலினும் நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறாரா? என்பது போன்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் கிளம்பி உள்ளன.

Recommended Video

    தமிழகத்தில் மாறும் சூழல்.. Stalin உருவாக்கும் புதிய அரசியல் களம்

    வாரிசு அரசியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அண்ணாவிடம் ஒருமுறை கேட்டபோது, "ஐதராபாத் நிஜாம்களுக்கு இருக்க வேண்டிய கவலைகள் இது. நமக்கு இந்த சிந்தனையே வரக்கூடாது" என்றாராம்.

    ஆனால் அரசியல் என்பதும், தந்தைக்குப் பின் தனயன் ஆட்சிக்கு வருவது என்பதும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளது... ஒரு சாரார் மத்தியில் இது விவாதப் பொருளாக உள்ளபோதிலும் நல்லாட்சியை யார் செய்தால் என்ன? அதன் பலன்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் தமிழக மக்களுக்கு இருக்கவே செய்கிறது.

    மக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வுமக்கள் உயிர் காப்போம்; அப்பாக்களின் நினைவுகளால்...கருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின், கனிமொழி நெகிழ்வு

    கருணாநிதி

    கருணாநிதி

    அந்த வகையில்தான், தற்போது ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சிக்கவும், பாராட்டவும் துணிந்துள்ளனர்.. கருணாநிதியின் நீண்ட அரசியல் பாரம்பரியத்திற்கும், நெடிய ஆட்சிப் பயணத்திற்கும், ஆழ்ந்த ராஜதந்திரத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் எவ்வளவோ பேர் திணறினார்கள்... எளிமையாக சொல்ல வேண்டுமானால், இலவச டிவி முதல் இலவச வீட்டு மனை பட்டாவரை எவ்வளவோ நலத்திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றினாலும் மக்களிடையே அதை வாக்குகளாக மாற்றும் சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது.

    தேர்தல்

    தேர்தல்

    ஆனால், இப்படி எந்தவித இலவசங்களையும் தேர்தல் அறிக்கையில் சொல்லாமல், ஸ்டாலின் ஆட்சியை பிடித்ததும், ஆட்சியை பிடித்தபின் ஏற்கனவே அறிவித்திருந்த பல அறிவிப்புகளை செயல்படுத்த முனைவதும், கருணாநிதியிடம் இருந்து வேறுபடுத்தி காட்டி வருகிறது.

    மதிப்பு

    மதிப்பு

    கருணாநிதி அரிய ஆற்றல்களையும், பதவிகளை வகித்தாலும் அனைவரையும் மதித்துப் போற்றும் மாண்புடையவர்... யாரையுமே ஒருமையில் அழைக்காத உயர்ந்த பண்பாளர்... கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் போன்றோர் கட்சிக்கு அப்பாற்பட்டு கலைஞரை நேசிப்பததற்கு காரணம் அவர் வகித்த பதவி கிடையாது... அவரது பண்பும், பாசமும், வயதைக் கடந்த மரியாதையும்தான்.

    ராமதாஸ்

    ராமதாஸ்

    இந்த நாகரீக கோட்டை மீறாமல் பாதுகாத்து வருகிறார் முக ஸ்டாலினும்.. எப்போதுமே ஸ்டாலின் மென்மையான போக்கை கடைப்பிடிப்பவர்.. இதுவரை யாரையும் தடித்த வார்த்தைகளால் பேசியதோ, விமர்சித்ததோ இல்லை.. இப்போது ஆட்சிக்கு வந்ததும், ராமதாஸ், விஜயகாந்த் போன்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அன்பு பாராட்டுவது அப்படியே கருணாநிதியின் செயலாகவே காட்சி தருகிறது.

    பேச்சு

    பேச்சு

    ஆனால், தந்தை அளவுக்கு இல்லையென்றாலும் நல்ல பேச்சாளராக இல்லையே, சரளமாக, இலக்கிய நடையாக, மக்கள் கூட்டத்தை கட்டிப்போடும் அளவுக்கு பேச்சுத்திறன் இல்லாதவராக இருக்கிறாரே என்ற விமர்சனங்கள் எழாமல் இல்லை.. துண்டுசீட்டு என்று சீமான் வரை கிண்டலடிக்கும் நிலைமையும் ஏற்பட்டது.. ஆனால், பிரச்சனையில் சிக்கி சுண்ணாம்பு ஆகி கொண்டிருக்கும் மக்களுக்கு தேவை தூய தமிழோ, சொல்வண்ணமோ கிடையாது, அவர்களை அரவணைத்து காக்கும் நம்பிக்கை வார்த்தைகளே என்பதைதான் ஸ்டாலின் உணர்ந்திருந்தார்.. அதன்படிதான் இந்த முறை தேர்தல் பிரச்சாரங்களில் வீறுகொண்டு பேசினார்.. எஸ்பி வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார் போன்றோரின் தொகுதிகளுக்கு சென்றபோது மட்டும், கொஞ்சம் எமோஷனல் ஆகி பேசியதை மறுக்க முடியாது.

    நுணுக்கம்

    நுணுக்கம்

    கருணாநிதிக்கு எது பிடிக்கும், எதற்கு கோபப்படுவார், எந்த விஷயத்துக்கு பாராட்டுவார் என்று எல்லாருக்கும் தெரியும்.. அந்த நுணுக்கத்தை அறிந்ததால்தான், ஆற்காடு வீராசாமி, அன்பழகன் போன்றோரால் 80 வருடமாக கூடவே கட்சி பணியை ஆற்ற முடிந்திருக்கிறது.. ஆனால், ஸ்டாலினை அப்படி கணிக்க முடியாது.. ஓபனாக சொல்ல வேண்டுமானால், கருணாநிதியைவிட கொஞ்சம் அழுத்தமான நபராகத்தான் ஸ்டாலின் தென்படுகிறார்.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    அதேசமயம், சீனியர் நிர்வாகிகள் ஏதாவது அதிருப்தியில் இருந்தால் கருணாநிதி அப்படியே விட்டுவிட மாட்டார்.. டக்கென போனை போட்டு பேசிவிடுவார், அல்லது நேரில் அழைத்து உட்கார வைத்து பிரச்சனையை சரி செய்வார்.. ஆனால், ஸ்டாலினுக்கு இன்னமும் கூட சில சீனியர்களை டீல் செய்ய முடியவில்லை.. இது இப்போதுவரை திமுகவுக்கு இருக்கும் ஒரு மைனஸ்தான்.

    ஆளுமை

    ஆளுமை

    முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஸ்டாலினுக்கு ஒரு பிளஸ் இருக்கிறது.. கருணாநிதிக்கு ஜெயலலிதா என்ற ஆளுமை எதிர்க்கட்சியில் இருந்தது.. ஆனால், அப்படி யாரும் இன்று இல்லை.. இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் ஸ்டாலினுக்கு பிறகு அரசியலுக்கு வந்தவர்கள்தான்.. இதனால் திமுகவின் பலத்தை மேலும் பன்மடங்காக பெருக்கிக் கொள்ள முடியும்..!

    விமர்சனம்

    விமர்சனம்

    இயல்பாகவே ஸ்டாலினுக்கு இருந்த சில பழக்கங்கள் தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறதையும் மறுக்க முடியாது.. முன்பெல்லாம் ஸ்டாலினுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லையானால், அவரை விமர்சனம் செய்ய மாட்டார்.. ஆனால், நட்பில் இருந்து கட் செய்துவிடுவார்.. இப்போது அப்படி இல்லை.. தன்னை கடுமையாக விமர்சித்தவர்களை கூட அரவணைத்துச் செல்லவேண்டும் என்று புரிந்து வைத்து கொண்டுள்ளார். அதுபோலவேதான் முன்பெல்லாம் மீடியாவை சந்திக்க ஆர்வம் காட்டாத ஸ்டாலின், இப்போதுதேடி தேடி பேசுவதும் அச்சு அசல் கருணாநிதி போலவே இருக்கிறது.

    பலம்

    பலம்

    அதேசமயம், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியையும், ஒரே ஒரு முறை, அதுவும் ஒரு மாசம்கூட ஆகாத நிலையில் ஸ்டாலினின் செயல்பாட்டையும் ஒப்பிட முடியாது.. ஒப்பிடவும் கூடாது.. கருணாநிதி இருந்த காலக்கட்டம் வேறு.. இப்போதைய காலகட்டம் வேறு.. ஆனால், கருணாநிதியுடனேயே பயணித்து வந்ததால், பல விஷயங்களையும் ஸ்டாலின் கற்றுக் கொண்டதுதான் தற்போது ஆகச்சிறந்த பலமாக இருந்து வருகிறது. அது இந்த கொரோனாவை சமாளிப்பதிலேயே நன்றாக தெரிகிறது..

    சபாஷ்

    சபாஷ்

    இருந்தாலும், தேர்தல் வெற்றியிலும்சரி, உள்கட்சி அரசியல் வெற்றியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் ஸ்டாலின் இப்போதைக்கு கருணாநிதியைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்... இனி வரும் ஆட்சி எப்படி இருக்க போகிறது என்பதை இனிமேல்தான் பார்க்க முடியும்..!

    English summary
    Does DMK MK Stalin differ from Karunanidhi's activities
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X