Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா? அன்புமணி பிளான் ‘சீக்ரெட்’ - போட்டு உடைத்த டாப் நிர்வாகி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிக இருப்பதால், சிக்கல் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பாமக பொருளாளர் திலகபாமா பேசியுள்ளார்.

2011 தேர்தலின்போது திமுக கூட்டணியில் பாமக, விசிக ஆகிய இரு கட்சிகளும் இருந்துள்ளன. ஆனால், அதன்பிறகு பல்வேறு விவகாரங்களில் தொடர்ச்சியாக திருமாவளவன், ராமதாஸ் முட்டிக்கொண்டு வருகின்றனர். அதன்பிறகு இருவரும் ஒரே அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அப்படியான சூழல் ஏற்படுமா என்பது அரசியல் அரங்கில் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. விசிக, பாமக கூட்டணியை விரும்பாது எனக் கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கான வாய்ப்பு குறித்துப் பேசியுள்ளார் பாமக பொருளாளர் திலகபாமா.

காட்சி மாறுமா?

காட்சி மாறுமா?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுகவில் அமைந்த கூட்டணி அப்படியே தொடரும் எனக் கூறப்படுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் கூட்டம் அடிக்கடி நடப்பதன் மூலமும் கொள்கைக் கூட்டணி எனச் சொல்லி வருவதன் மூலமும் அது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஆனால், அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ண ஓட்டங்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன. எனவே, லோக்சபா தேர்தலுக்கு கூட்டணி காட்சிகள் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக தலைமையில்

பாமக தலைமையில்

வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாமக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகவிருப்பதாகவும், திமுக கூட்டணியில் இணையவிருப்பதாகவும் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. இதுதொடர்பாக பாமகவில் இருந்து கருத்துத் தெரிவிக்காத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ல் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்போம், அதற்கான வியூகத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது செயல்படுத்துவோம் என்றார். எனினும், கூட்டணி தொடர்பாக வெளிப்படையாக எதையும் அன்புமணி அறிவிக்கவில்லை.

பாமக கணக்கு

பாமக கணக்கு

பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்றால், திமுக, அதிமுகவோடு பாமக கூட்டணி அமைக்கப் போவதில்லையா என்ற கேள்விகள் எழுந்தன. இதனை பாமக உறுதிப்படுத்தாத நிலையில், பல்வேறு கணக்குகளுடன் பாமக இருப்பது மட்டும் உறுதியாகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, பாமகவின் திட்டம் என்ன என்பது வெளிப்படையாகத் தெரியவரும், கூட்டணி அமைக்க பாமக பல நிபந்தனைகளை விதிக்கக்கூடும் என பாமகவின் பொருளாளர் கவிஞர் திலகபாமா பேச்சின் மூலம் அறிய முடிகிறது.

கூட்டணி எதற்காக

கூட்டணி எதற்காக

பாமக மாநிலப் பொருளாளர் கவிஞர் திலகபாமா ஒரு தனியார் ஊடகத்திற்குப் பேட்டி அளிக்கும்போது, கடந்த தேர்தலில் கூட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உறுதி கொடுத்த பிறகே அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. 40 ஆண்டுகாலத்திற்கும் மேலாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் இட ஒதுக்கீட்டு நோக்கம் நிறைவேற வேண்டும், பாமக தனித்து நிற்பதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே பாமக, அதிமுகவோடு கூட்டணி அமைத்தது, சீட்களுக்காக மட்டும் அரசியல் செய்யும் இயக்கம் பாமக அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் தனியாக முடிவெடுக்க மாட்டார்

ராமதாஸ் தனியாக முடிவெடுக்க மாட்டார்

மேலும், ஒருவரை விலக்குவதற்காக நாங்கள் அரசியல் நடத்தவில்லை. எல்லோரையும் அரவணைப்பதற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். எங்கள் தலைமையை ஏற்றுக்கொள்கிற, கருத்துகளோடு ஒத்துப் போகின்ற கட்சிகளோடு கூட்டணி என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. ராமதாஸோ, அன்புமணியோ தனியாக முடிவெடுக்கக்கூடிய விஷயம் அல்ல. கட்சி நிர்வாகிகள் கூடியே, கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். தேர்தல் நெருங்கும்போது நாங்கள் முடிவெடுப்போம் எனக் கூறியுள்ளார்.

திருமா - ராமதாஸ்

திருமா - ராமதாஸ்

விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திலகபாமா, திருமாவளவனை நீங்கள் இந்தப் பக்கம் வந்து இயக்கம் நடத்துங்கள் என்று கைசேர்த்து அழைத்து வந்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ். திருமாவளவன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அவரிடமே அன்போடு சொல்லி வருபவர். ஆனால், முரண்பாடுகள் ஏற்படும்போது விமர்சிக்கவும், கண்டிக்கவும் செய்கிறார் ராமதாஸ். ஒரு இயக்கத்தின் மீது எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும், பாமகவுக்கோ, நிறுவனர் ராமதாஸுக்கோ இருந்ததே கிடையாது.

தீண்டாமை கிடையாது

தீண்டாமை கிடையாது

விசிக தவறு செய்தால் சுட்டிக் காட்டுபவராகவோ, கண்டிப்பவராகவோ தான் ராமதாஸ் இருக்கிறார். விசிக இருந்தால், பாமக அருகே நிற்காது என்ற தீண்டாமை எண்ணம் என்றைக்குமே பாமகவுக்கு கிடையாது. எங்களையும் ராமதாஸ் அவ்வாறு அனுமதித்ததில்லை. சமீபத்தில் கூட ஒரு கூட்டத்தில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியும், விசிக தலைவர் திருமாவளவன் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.

விசிக + பாமக

விசிக + பாமக

சக மனிதர்கள் மீது எந்தவித வெறுப்பும் பாமகவுக்குக் கிடையாது. திருமாவளவன் தான் ராமதாஸுக்கு தமிழ்க்குடிதாங்கி என்ற பட்டம் கொடுத்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட, ராமதாஸை மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருப்பதாகத்தான் திருமாவளவன் பேசுகிறார். ராமதாஸும் அதே போலத்தான் திருமாவளவனை அணுகுகிறார். பாமக வந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்பதெல்லாம் வெறும் யூகம் எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் யார்?

அதிமுகவில் யார்?

அதிமுக விவகாரத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் யாரை பாமக கூட்டணிக்கு அணுகும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திலகபாமா, பாமகவைப் பொறுத்தவரை அதிமுகவில் நிலவி வருவது உட்கட்சி விவகாரம். ஜனநாயக ரீதியாக கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையோடு தான் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியும். உள்ளே நடக்கும் விஷயங்களைப் பார்த்து, கட்சியை எப்படி ரெண்டாக்கலாம் என நாங்கள் திமுகவைப் போல யோசிக்க மாட்டோம், எந்தக் கட்சியையும் கூறுபோட்டு நுழையும் நோக்கம் எங்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+