• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வந்த பாஜக.. "அப்படின்னா இது திமுகவுக்கு முன்னாடியே தெரியுமா".. என்னாச்சு?

Google Oneindia Tamil News

சென்னை: தஞ்சையில் நடந்த தேர் திருவிழா விபத்து குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.. இது திமுக தரப்பை கடுப்பாக்கி வருகிறது.

தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது.. உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இன்று காலையில், இந்த அதிர்ச்சியை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

முற்றும் மோதல்.. நீங்கள் ஆளுநரா? பாஜக தலைவரா?.. தமிழிசைக்கு செக் வைக்கும் தெலுங்கானாவின் டிஆர்எஸ்? முற்றும் மோதல்.. நீங்கள் ஆளுநரா? பாஜக தலைவரா?.. தமிழிசைக்கு செக் வைக்கும் தெலுங்கானாவின் டிஆர்எஸ்?

 கவன ஈர்ப்பு தீர்மானம்

கவன ஈர்ப்பு தீர்மானம்

உயிரிழந்தவர்கள் சார்பில் இழப்பீட்டு தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.. அப்போது,திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்... பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதாது என்று பாஜகவும் குறை சொல்ல ஆரம்பித்தது..!

சேகர்பாபு

சேகர்பாபு

இப்படிப்பட்ட சூழலில், அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் தஞ்சாவூர் தேர் திருவிழாவை, ஊர் மக்களே ஒன்று கூடி நடத்திவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் தந்தார்.. இந்த தேர் விபத்து தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்ற நிலையில், "களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழாவும் கிடையாது, அது தேரும் கிடையாது.. மாறாக அது சப்பரம்.. இந்த விழா அரசுக்கு தகவல் அளிக்காமல் நடத்தப்பட்டுள்ளது" என்று சேகர்பாபு கூறியிருந்தார்.

 திருப்பதி நாராயண்

திருப்பதி நாராயண்

அமைச்சர் சேகர்பாபு சொன்ன இந்த கருத்தைதான் தமிழக பாஜக விமர்சிக்க ஆரம்பித்துள்ளது.. தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் திருப்பதி நாராயண் இதுகுறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "மத்திய மண்டல ஐ ஜி திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் தனியார் தொலைக்காட்சியில்,மின் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், உயர் மின் அழுத்த கம்பிகளை தவிர்த்து மின்சாரத்தை செயலிழக்க செய்திருந்தாகவும் கூறியுள்ளார். அப்படியானால் அரசுக்கு தெரிந்தே இந்த விழா நடந்துள்ளது என்று தானே பொருள்?" என்று தெரிவித்துள்ளார்.

நாராயணா

நாராயணா

இது திமுக தரப்புக்கு கடுப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இதற்கு பலரும் திரண்டு வந்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.. "இப்படியெல்லாம் அரசு வேண்டுமென்றே செய்யுமா? அமைச்சர் சொன்னது அது தேர் திருவிழா இல்லை என்பதற்கான விளக்கம்தான் என்றும், தேர் திருவிழாவுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு தரப்படுமா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. மேலும் சிலர், அதெல்லாம் இருக்கட்டும் நாராயணா கடவுள் ஏன் காப்பாற்றவில்லை இவர்களை? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

English summary
Does the DMK government know in advance when the tanjore festival will take place and What does the TN BJP say
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X