மழை வருது..மழை வருது! மழைக் காலத்தில் கவனமாக இருங்க மக்களே! செய்ய வேண்டியவை.. கூடாதவை என்னென்ன?
சென்னை : மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில்.. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காக மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து பார்க்கலாம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை, திருவள்ளூர் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பொதுமக்களுக்கு காய்ச்சல் சளி உள்ளிட்ட பிரச்சனைகள் வருவதும் அதிகரித்துள்ளது. மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது மிக முக்கியம் என்பதால் மழைக்காலங்களில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்! என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பார்க்கலாம்..

செய்ய வேண்டியவை
*மழைக்காலத்தில் குடிநீர் மூலம் நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்.
*காய்கறி பயறு வகைகளை அதிக அளவில் உணர்வில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
*சமைத்த உடன் சூடாக உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆறிப்போன உணவுகளால் சளி தொல்லை போன்ற பிற பிரச்சனைகள் ஏற்படலாம்.
*மழைக்காலங்களில் குளிர் அதிகம் இருக்கும் என்பதால் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் வகையில் சூப், ரசம், டீ, காபி உள்ளிட்டவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.

விபத்து வாய்ப்பு
*மழைக்காலங்களில் திடீர் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பாரஸ்ட்டமல் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை மருத்துவர் ஆலோசனையின் பேரில் தயாராக வைத்துக் கொள்ளலாம்.
*காலங்களில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மின் விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்களை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
*வீட்டை சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தைகளை மிக கவனமுடன் பெற்றோர் கண்காணிக்க வேண்டியதும் மிக முக்கியம்.
*மழைக்காலங்களில் நீர் தேங்கி இருப்பதால் சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாது எனவே வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
*சாலையோரம் இருக்கும் மின்சாதன பொருட்களையோ மின் கம்பிகளையும் தொடக்கூடாது.

செய்யக்கூடாதவை
மழைக்காலங்களில் மின்சாரம் காரணமாக ஏற்படும் விபத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதால் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் மற்றும் மின்சாதன பொருட்களை தொடுவதையோ அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும்.
*உங்கள் பகுதிகளில் ஏதேனும் மின் குளறுபடிகள் இருந்தால் அது குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்கக் கூடாது.
*மழை நேரங்களில் மரத்திற்கு அடியில் இருப்பது மொட்டை மாடி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலின் போது கணினி செல்போன் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

மின்சாரம் கவனம்
*வீட்டு சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தாலும் இடிந்து விழுவதற்கோ அல்லது மின்சாரம் தாக்குவதற்கோ வாய்ப்புள்ளதால் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
*குளிர்காலங்களில் சளித்தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தயிர் வெண்ணை ஜூஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
*முடிந்த அளவு குளிர்சாதன பெட்டியில் வைத்த குடிநீர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications