வேகமாகும் XBB! தற்காத்து கொள்வது எப்படி? சூப்பரான எனர்ஜி பூஸ்டர் ரெசிபி.. டாக்டர் ஒய் தீபா
சென்னை: இந்தியாவில் பரவி வரும் XBB வேரியண்ட் பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உலகமெங்கும் பரவி வரும் பிஎப் 7 எனும் வேரியண்ட் இந்தியாவில் ஜூலை மாதமே பரவி இருந்தது. ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததால் நாம் அது குறித்து அச்சம் கொள்ளாமல் இருந்தோம்.
தற்போது இந்தியாவில் சிலருக்கு பிஎப் 7 வைரஸ் பரவியுள்ளது. இவர்களுக்கு எந்த மாதிரியான அறிகுறிகள் இருக்கிறது என்பதை பார்ப்போம், நுரையீரலின் மேல் பகுதியில் மட்டும் தொற்று ஏற்படுதல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் , இருமல் ஆகியவை ஏற்படும்.
இந்த அறிகுறிகள் இல்லாமல் சிலருக்கு வயிற்றுப் போக்கும் வாந்தியும் ஏற்படுவதாக சொல்கிறார்கள். இது பிஎப் 7 வைரஸ்தான் ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தற்போது பரவி வருவது XBB recomninant variant என சொல்வார்கள். இதை மற்ற ஓமிக்ரான் தொற்றுகளுடன் ஒப்பிட்டால் மறுபடியும் தொற்று வரலாம். ஆனால் பெரிதாக பாதிப்பு இருக்காது.

ஓமிக்ரான் வைரஸ்
கடந்த ஓராண்டாக ஓமிக்ரான் வைரஸ் இருந்தாலும் அதிக அளவில் பரவவில்லை. கேஸ்களும் அதிகமாக இல்லை. இந்தியாவில் 68 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால் இந்த புதிய வேரியண்ட் பெரிதாக பரவவில்லை. இந்த புதிய வைரஸ் பரவாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்றால் மசாலா டப்பாவில் இருக்கும் பொருட்களே போதுமானது.

ஒரு டம்ளர் தண்ணீர்
ஒரு டம்ளர் தண்ணீர் (200 டூ 250 மில்லி) எடுத்துக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீ ஸ்பூன் மிளகு தூள், சிறிய இஞ்சி துண்டை நசுக்கி போட வேண்டும். 10 முதல் 20 துளசி இலைகளை சுத்தம் செய்து எடுத்து போட வேண்டும். 5 கிராம் அதிமதுரம் இதனுடன் ஒரு ஏலக்காய் , லவங்கத்தை இடித்து போட வேண்டும். இவற்றை 2 முதல் 3 நிமிடங்கள் வரை கொதிக்கவைக்க வேண்டும்,. குழந்தைகளுக்கு தேன் கலந்து 15 முதல் 20 மில்லி வரை கொடுக்கலாம். பெரியவர்கள் என்றால் 30 முதல் 50 மில்லி வரை எடுத்துக் கொள்ளலாம். இந்த நோய் எதிர்ப்பு சக்தி பானத்தை தினமும் குடித்து வந்தால் எந்த தொற்றும் ஏற்படாது.

ஜீரண சக்தி
ஜீரண சக்தி, நுரையீரல், ஆக்ஸிஜன் திறன், நுரையீரல் திறன் ஆகியவற்றை மேன்மைப்படுத்த இது உதவும். இஞ்சியில் இருக்கும் ஜின்ஜரால் நம் நுரையீரலில் எந்த தொற்றும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். தற்போது குழந்தைகளுக்கு தொண்டை கரகரப்பு, சளி, இருமல், சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மலேரியா, வைரஸ் காய்ச்சல், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுவதை பார்த்து வருகிறோம். இவை எல்லாவற்றுக்கும் குணப்படுத்தும் அற்புத மருந்தாக இந்த இம்யூன் பூஸ்டர் இருக்கும். இவற்றுடன் எனர்ஜி பூஸ்டரையும் குடித்து கொண்டே வர வேண்டும்.

எனர்ஜி பூஸ்டர்
எனர்ஜி பூஸ்டரை தயாரிக்க 100 முதல் 150 மில்லி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் மிளகு தூள். 10 முதல் 20 துளசி இலை, ஒரு பெரிய நெல்லிக்காயில் பாதி அல்லது ஒரு எலுமிச்சையில் நான்கில் ஒரு பங்கு, 5 கிராம் இஞ்சி சாறு ஆகியவற்றை ஜூஸாக அடித்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வர வேண்டும். எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் காய்கள், கீரைகள், பழங்கள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு சக்தி
நாம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். குழந்தைகளை பொது இடங்களுக்கு அதிகமாக அழைத்து செல்ல வேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க கற்றுத் தர வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ சொல்லித் தர வேண்டும். சானிடைசரை குழந்தைகள் பயன்படுத்தாவிட்டாலும் கூட எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருக்க அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்.

தொண்டை கரகரப்பு
தொண்டை கரகரப்பு, சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் வந்தாலே வெதுவெதுப்பான தண்ணீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் கல் உப்பு போட்டு தொண்டை வரை வைத்து வாய் கொப்பளிப்பதை தொடங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை செய்ய வேண்டும். இந்த வாய் கொப்பளித்தல் மூலம் தொண்டையில் இருக்கும் வைரஸ் செயலிழந்துவிடும்.

குழந்தைகளுக்கு சளி
குழந்தைகளுக்கு சளி இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை சுடு தண்ணீரில் நீலகிரி தைலம், நொச்சி இலை, கற்பூரவள்ளி இலை வைத்து நன்றாக வாயை திறந்து கொண்டு அந்த ஆவி தொண்டை வரை படும் வரை வேது பிடித்தல் வேண்டும். பெட்ஷீட் போட்டு மூடி குழந்தைகளை பயமுறுத்த தேவையில்லை. திறந்தவெளியிலேயே இப்படி செய்யலாம். வேது பிடித்தவுடன் மூக்கின் ஒரு துவாரத்தை முடி கொண்டு மறு துவாரத்தால் மூக்கை உறிஞ்ச வேண்டும். அது போல் மற்ற துவாரத்திற்கும் செய்ய வேண்டும். மூக்கில் நீர் கோர்த்திருந்தால் கரைத்து வைரஸ் இருந்தால் அதை செயலிழக்க வைக்கும். வெந்நீர் அடிக்கடி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக கொடுக்க வேண்டும்.

நீர் சத்துள்ள காய்கறிகள்
நீர் சத்துள்ள காய்கறிகள், கீரைகள், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்களை கொடுத்துக் கொண்டே வந்தால் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கீரையை சூப்பாக வைத்தும் கொடுக்கலாம். அதில் இஞ்சி, பூண்டு, மிளகு ஆகியவற்றை தட்டி போட்டு கொடுக்கலாம். இது போக யோகா பயிற்சிகளை செய்யலாம். நாடி சுத்தி பிராணயாமம் செய்ய வேண்டும். கட்டை விரலால் வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து வலது நாசி வழியாக விட வேண்டும். இதே போல் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக மூச்சை உள்ளே இழுத்து இடது நாசி வழியாக விட வேண்டும். இது ஒரு ரவுண்ட். இதை தினமும் 10 தடவை செய்து கொண்டே வந்தால் நமக்கு சுவாச பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது. ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து நாடிகளை சுத்தம் செய்து தொற்று ஏற்படாமல் தடுக்கும். இவ்வாறு டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications