Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

54 வயது பெண்ணுக்கு மார்பகத்தில் அரிய வகை புற்றுநோய்! யோகா மூலம் வீரியத்தை குறைத்த அரசு மருத்துவமனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்பகத்தில் ஏற்படும் மிக அரிய வகை புற்றுநோயால் வீக்கம், வலியுடன் அவதிப்பட்ட 54 வயது பெண்ணுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது கட்டியின் அளவும் வலியும் குறைந்துவிட்டதாக டாக்டர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனையின் கைநுட்பத் துறை டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் Adenoid Cystic Carcinoma என்பது அரிய வகை புற்றுநோயாகும். இது பொதுவாக கழுத்து, தலை பகுதிகளில் வரும். மார்பகம், சருமம், கருப்பை ஆகியவற்றிலும் ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பியில் வரும். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் வந்த நோயாளிக்கு மார்பகத்தில் இந்த அரிய வகை புற்றுநோய் இருந்தது.

அவருக்கு வலது மார்பகத்தில் பெரிதாகவும் வலியுடனும் காணப்பட்டது. புற்றுநோய் என வந்துவிட்டாலே மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் புற்றுநோயின் வீரியமும் அதிகரிக்கும். இது கட்டியின் வீக்கம் அதிகரிக்கவும், புற்றுநோயின் செல்கள் அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நோயாளிக்கு தூக்கமின்மைக்கு மருந்து, இயற்கையான உணவு கொடுத்தோம். பின்னர் கேன்சரின் வீக்கத்தை குறைத்துள்ளோம்.

அவரை உள்நோயாளியாக அனுமதித்து, அவருக்கு 3 வேளையும் காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயறு வகைகள், பழச்சாறுகள் ஆகியவற்றை கொடுத்தோம். இதனால் அவருக்கு வலி நாளடைவில் குறைந்தது. புற்றுநோயின் போது அவருக்கு இருந்த வலியையும் சிகிச்சை முடிந்து அவருக்கு இருக்கும் வலியையும் அளவிட்டோம். இரவில் தூக்கமில்லாமல் இருந்தார். நேராக படுத்தாலும் வலியை கொடுக்கும், பக்கவாட்டிலும் படுக்க முடியாத நிலையால் தூக்கமின்மை இருந்தது. இதற்காக அவருக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை கொடுத்தோம்.

விதை சிகிச்சை

விதை சிகிச்சை

விதை சிகிச்சை, ஆரிகுலர் தெரபி (காதுகளில் சில புள்ளிகளை தூண்டுவது, வலி குறையும் புள்ளிகளை தூண்டுவது, தூக்கத்தை தூண்டுவது), நீர் சிகிச்சை (chest pack), மார்பகத்திற்கு மண்ணை பூசி வெயிலில் உட்கார வைத்தோம். இதனால் அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. நோயின் அழற்சியை குறைத்தது. நிற சிகிச்சை அளித்தோம். நீல நிறத்தில் இருக்கக் கூடிய கண்ணாடியில் சூரிய வெளிச்சம் பட்டு அவருடைய மார்பகத்தில் படும்படி செய்தோம். இதனால் கேன்சர் கட்டியின் வீக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. எடையும் குறைந்தது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

கவுன்சலிங் கொடுத்ததன் மூலம் மன அழுத்தம், சோர்வு நீங்கியது. பிராணயாமம், தியான பயிற்சி, மூச்சு பயிற்சி, தளர்வடையும் டெக்னிக், ஆகியவற்றை கொடுத்தோம். பாரம்பரிய ஜீனில் ஏதேனும் மாற்றங்கள் வரும் போது கேன்சர் உருவாகிறது. இதை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக கேன்சர் நோயிலிருந்து விடுபடி உதவும். ஹேண்ட் ஸ்ட்ரெச், தாடாசனா, டீப் ரிலாக்ஸ்சேஷன் டெக்னிக், புஜங்காசனம், வஜ்ராசனம், வக்ராசனம் உள்ளிட்ட ஆசனங்களையும் நாடி சோதன பிரணாயாமம், பிராமரி பிரணாயாமம் உள்ளிட்ட மூச்சு பயிற்சிகளை கொடுத்தோம்.

புற்றுநோய் வந்தவர்கள்

புற்றுநோய் வந்தவர்கள்

புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆரம்ப கட்டத்திலேயே இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளித்தால் நோயின் வீரியத்தை நிச்சயமாக குறைக்க முடியும். காந்தக சிகிச்சை கொடுத்ததன் மூலம் ரத்த ஓட்டத்தை அதிகரித்தது. இந்த Adenoid Cysctic Carcinoma என்ற புற்றுநோய் மார்பகத்தில் கல் போன்று இருக்கும். கைபட்டாலே வலி இருக்கும். உடலில் உள்ள மன அழுத்தத்தை குறைத்தாலே உடலில் உள்ள வேதியியல் மாற்றத்தை கொடுக்க முடியும். இயற்கையான சிகிச்சைகளை கொடுக்கும் போது மெலடனின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.

யோகா பயிற்சிகள்

யோகா பயிற்சிகள்

யோகா பயிற்சிகளை கொடுக்கும் போது வலி, மன அழுத்தம் குறைந்து அந்த புற்றுநோயிலிருந்து வெளியே வர அவரது உடலில் Dopomine Serotonin அளவு அதிகரிக்கும். இதனால் கார்டிசால் (Cortisol) எனும் ஸ்டிரெஸ் ஹார்மோனின் அளவை குறைக்கும். Foot reflexology சிகிச்சையை உள்ளங்கை, பாதங்களில் அழுத்தம் கொடுப்பது, அக்குபிரஷர், அக்குபஞ்சர் சிகிச்சை தரும் போது gamma aminobutyric acid (நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான ஆசிட்) உருவாகும். அவருக்கு அருகம்புல் சாறு, கோதுமை புல் சாறு ஆகியவற்றை ரெகுலராக கொடுத்தோம். இதில் இருக்கும் குளோரோபில் அவரது உடலில் ஹீமோகுளோபினை மேம்படுத்தும். அவருக்கு ஸ்பைனல் மசாஜ் தெரபி கொடுத்தோம். இதனால் அவருக்கு Endorphins அளவை அதிகரித்து ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைத்தோம். வாழையிலை குளியலை கொடுத்ததாலும் கட்டியின் அளவு குறைந்தது. இன்னும் சிகிச்சைகளை கொடுத்து புற்றுநோயிலிருந்து அவரை முழுமையாக குணப்படுத்த முடியுமா என்பதை இன்னும் பல ஆய்வுகளுக்கு பிறகுதான் சொல்ல முடியும். இவருக்கு அளித்த சிகிச்சை ஜெர்னலாக சமர்ப்பித்துள்ளோம். ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் இருக்கும் போதே அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் இலவச சிகிச்சை எடுப்பதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சையை ஒய் தீபா, சைதூன் நிஷா, மூவேந்தன், மணவாளன், எட்மின் கிறிஸ்டா ஆகியோர் செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+