சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மண்ணு போதும்.. 10 பைசா செலவில்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.. இதய நோயை விரட்டலாம்.. டாக்டர் ஒய் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: உடம்பும் மண்ணும் ஒன்றுதான். இவை இரண்டும் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அவ்வாறு இணைவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்கிறார் அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனையின் டாக்டர் தீபா.

இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நம் உடலாகிய கருவியை எர்திங் மூலம் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை குறித்துதான் தற்போது பார்க்க இருக்கிறோம். எர்திக் என்றால் மண், பூமி. இந்த நவீன உலகில் நாம் நிறைய எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நாம் இந்த பூமியுடன் தொடர்புபடுத்துவதற்காகவும், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காகவும், நமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும்.

அந்த காலத்தில் முன்னோர்கள் பூமியுடன் இணைந்திருந்தனர். தரையில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள், வீட்டிற்குள் செருப்பு அணிய மாட்டார்கள். வயல்வெளிகளிலும் செருப்பு அணிய மாட்டார்கள். எங்காவது காடு மேடுகளில் செல்லும் போது மட்டுமே அவர்கள் காலணியை அணிவார்கள். நாம் இப்போது பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி என நிறைய எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தி வருகிறோம்.

விஷயங்கள்

விஷயங்கள்

நாம் இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கு காரணம் என்ன என்பதை பார்த்தோமேயானால் மற்ற கிரகங்களில் இல்லாத விஷயங்கள் பூமியில் உள்ளது. உதாரணமாக தண்ணீர். இதுதான் முக்கியமான காரணம். இந்த இயற்கையை எந்த அளவுக்கு நாம் பேணி காக்கின்றோமோ அந்த அளவுக்கு நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். நம் உடலை நாம் பாதுகாத்தால், நம்மை இந்த பூமி பாதுகாக்கும்.

பூமியுடன் இணைப்பு

பூமியுடன் இணைப்பு

நம் உடலில் உள்ள பல செல்கள் அதிர்வெண்களை பரப்பும். குறிப்பாக இந்த பூமியிலிருந்து வெளியாகும் மின் காந்த சக்தியானது நம் உடலுக்கு கிடைக்கும் போது எதிர்ப்பு சக்தி, தசைகள், நரம்பு மண்டலம், இதய துடிப்பு ஆகியவை சீராக இருக்கும். தாய் பூமியுடன் நாம் சார்ந்திருந்தால் நம்மையும் நம்மை சார்ந்த அடுத்த தலைமுறையையும் நாம் பாதுகாக்கிறோம் என்று அர்த்தம். இந்த பூமியுடன் இணைப்பு என்பது ஏன் தேவை என்பதை பார்ப்போம்.

கவலை

கவலை

அன்றாட மக்கள் மன அழுத்தம், கவலை, சோகம், வலி, சோர்வு ஆகியவற்றை கடந்து செல்கிறோம். ஒரு சிலர் இதை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு கடந்து செல்கிறார்கள்.வேறு சிலருக்கு இது நோயாகவே மாறுகிறது. இதனால் நாம் மருந்துகளை சார்ந்திருக்கிறோம். மருந்துகளில் இருந்து நாம் வெளியே வர வேண்டும் என்றால் பூமியுடன் இணைந்திருக்க வேண்டும். ஜீரண மண்டலத்தில் உள்ள கோளாறுகள், தலைவலி, உடல் சோர்வு ஆகியவற்றிலிருந்து நாம் மீண்டு வெளியே வர பூமியுடன் இணைந்திருப்பது முக்கியமானதாகும்.

காரணி

காரணி

நம் உடலில் உள்ள வெள்ளையணுக்களில் நியூட்டிபில்ஸ், லிம்போடைட்ஸ் ஆகியவை அதிகமான அளவு இருக்கும் போது நம் உடம்பில் எந்த அழற்சிகள் நடந்தாலும் அதற்கு தேவையான ரசாயன காரணிகளை தூண்டிவிட்டு எதிர்த்து போராடக் கூடிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பூமியுடன் நாம் இணைந்திருந்தால் நம் உடலில் ரத்த சிகப்பு அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நம் உடலில் பிசுபிசுத்தன்மை குறைவதால் ரத்தம் உறைவதை தடுக்கிறது. இதன் மூலம் பல இதய நோய்களை தடுக்க முடியும்.

இயற்கை காற்று

இயற்கை காற்று

நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள உதவும். சூரிய வெளிச்சமும் இயற்கை காற்றும் இருக்கும் போது அதனால் பல நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக உடலில் உள்ள புது ரத்தம் சுழலும் போது வெளியே இருக்கக் கூடிய நெகடிவ் அயனிகள் தோல்களில் உள்ள துளைகளை திறந்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அந்த துளைகள் திறப்பதால் உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறுகிறது. பூமியுடன் இணையும் போது எலக்ட்ரான்கள் எல்லாம் சேர்ந்து உடலில் வேதியியல் மாற்றங்களை கொண்டு வருகிறது.

செருப்பில்லாமல்

செருப்பில்லாமல்

வீட்டுக்குள்ளேயும் சரி வெளியேவும் சரி செருப்பில்லாமல் நாம் நடக்க வேண்டும். இதனால் தூக்கம் சீராக இருக்கும். இடுப்பு வலி, கழுத்து வலி குறையும். முதுகுதண்டு வட பிரச்சினை இருக்காது. நாம் பூமியுடன் இணையும் போது அதன் எலக்ட்ரான்கள் நம் உடலில் கீழே இருந்து டிரான்ஸ்பர் ஆகும். அப்போது சில ஹார்மோன்களை தூண்டிவிடும். இதனால் செரோடனின், என்டார்பின் என்ற ஹார்மோன்கள் நிறைய சுரக்கும். ஆழ்ந்த தூக்கம் இருக்கும். மெலடனின் சுரத்தலை பராமரிக்கும். இதனால் நாம் மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவுகிறது. நாம் பூமியுடன் இணையும் போது நம் நரம்பு மண்டலத்தில் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இயற்கை

இயற்கை

இதனால் எந்த இடத்தில் ரத்த ஓட்டம் சரியாக இல்லையோ அந்த இடத்திற்கு அதிகமான ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் உதவுகிறது. நாம் பூமியில் கால் பதித்து நடப்பதால் கால்சியம், சோடியம், பொட்டாசியம் , மெக்னீசியம் ஆகியவற்றில் ஏதேனும் சீரற்ற தன்மை இருந்தால் அதை சரி செய்யும். நரம்பு மண்டலம், இதயத்தின் செயல்பாடுகள் சீராக இருக்க இது உதவுகிறது. மூளைக்கு தேவையான விஷயங்களை நேரடியாக இயற்கையாக பெற்றுக் கொள்ள வழிவகுக்கிறது.

வெறுங்காலில் நடை

வெறுங்காலில் நடை

பூமியுடன் இணைந்திருக்க நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம். வெறுங்காலில் நடத்தல், வாரத்தில் இரு நாட்களாவது சுத்தமான இடத்தில் வெறுங்காலில் நாம் நடக்க வேண்டும். நடக்கும் போது நம் பாதங்களில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் அனைத்தும் அழுத்தப்படுகிறது. அதாவது கால் பாதங்களில் ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கான நரம்புகள் தூண்டப்பட்டு நம் உடல் பிரச்சினைகளை தானாக சரி செய்ய உதவுகிறது. மண் தரையில் அரை மணி நேரம் நடக்கலாம். குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் பனித்துளிகள் இருக்கும். அதன் மீது நமது பாதம் பட்டவுடன் குறிப்பிட்ட உடல் உறுப்புகளின் புள்ளிகளின் நரம்புகள் தூண்டப்பட்டு எந்த பிரச்சினை இருந்தாலும் சரியாகும்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

இந்த மார்கழி மாதத்தில் நிறைய பேருக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கும், சளி பிடிக்கும். உடல் பருமன் இருக்கும். பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சினை இருக்கும். மன சோர்வு இருக்கும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும்காலில் நடக்கலாம். குளிர்ந்த காற்று நம் உடலில் படுவதன் மூலம் தோல் வழியாக அதிக ரத்தவோட்டத்திற்கு வழி செய்கிறது. எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. ஆஸ்துமா நோயாளிகள் காலையில் பணியில் நடந்தால் எப்போதும் ஆஸ்துமா பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வு

வெள்ளையணுக்களை அதிகரித்து நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கிறது. அது போல் தொற்றுகளும் வராமல் தடுக்கும். புற்கள் இல்லாவிட்டால் களி மண், கடற்கரை மண் ஆகியவற்றில் நடக்கலாம். காலியான இடத்தில் மிகவும் சாப்ட்டான மண்ணை குவித்து வைத்து அதில் நடக்கலாம். நம் மண்ணில் பல மினரல்கள் இருக்கின்றன. இவை நம் உடலில் இருக்கக் கூடிய அசுத்தங்களையும் கழிவுகளையும் வெளியேற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறினாலே நோயற்ற வாழ்வை வாழலாம்.

நுரையீரல்

நுரையீரல்

சாப்ட்டாக இருக்கக் கூடிய கூழாங்கற்களை போட்டு வீட்டு வராண்டாவிலோ பால்கனியிலோ அல்லது தோட்டத்திலோ போட்டு வெறும் கால்களில் நடக்கலாம். அந்த கூழாங்கற்கள் நம் கால்களில் உள்ள உறுப்புகளின் புள்ளிகளை தூண்டுகிறது. இவ்வாறு நடக்கும் போது நுரையீரல் பகுதிகளில் நாம் பேலன்ஸ் செய்வோம். நுரையீரல் தொடர்பான எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்கும். என்னதான் கொரோனா உருமாறியிருந்தாலும் நமக்கான நோய் எதிர்ப்பு சக்திதான் நமது பலமே. தினமும் 15 நிமிடங்கள் நடக்கலாம்.

ரப்பர்

ரப்பர்

எதில் எல்லாம் நடக்கக் கூடாது என்பதை பார்ப்போம். கட்டை, ரப்பர், பிளாஸ்டிக் மேல் நடக்கக் கூடாது. சில அமிலங்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் நடக்கக் கூடாது. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, சீரான தூக்கம் ஆகியவை இந்த கிரவுண்டிங் மூலமாக கிடைத்து நமது வாழ்வியலையே மாற்றும். எனவே காலையிலும் மாலையிலும் நாம் இயற்கையோடு இணைந்திருப்போம். பூமியோடு இணைந்திருப்போம் என்றார் ஒய் தீபா.

English summary
Government Yoga and Naturopathy hospital's manipulative therapy HOD Dr. Y Deepa says about Earth connectivity and its benefits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X