சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லதை வச்ச கண் வாங்காம பாருங்க.. கொரோனாவால் அலையும் மனசை அமைதிப்படுத்துங்க.. டாக்டர் ஒய் தீபா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தொற்று காலத்தில் எதையாவது மனதில் போட்டு யோசித்துக்கிட்டே இருப்பவர்கள் மன அமைதி பெற இந்த யோகிக் கிரியம் திராடகத்தை செய்தால் பலன் உண்டு என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் ஒய் தீபா.

Recommended Video

    Health Tips: மனதை அமைதிப்படுத்துவது எப்படி? | Doctor Advice

    கொரோனா காலத்தில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதாலும் எங்கே நமக்கு நோய் தொற்று வந்துவிடுமோ என்ற பயத்தினாலும் மக்களின் மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மனம் அலைபாய்கிறது. மன அமைதியை பெற இந்த யோகா பயிற்சிகள் அவசியம் என்கிறார் டாக்டர் ஒய் தீபா.

    இது குறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது.

    ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு! ஒரு வாரமாக மோசம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 6426 கொரோனா கேஸ்கள்.. மொத்த பாதிப்பு 234114 ஆக உயர்வு!

     சாந்தப்படுத்துதல்

    சாந்தப்படுத்துதல்

    இதை குறைக்க யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் யோகிக் கிரியம் என்ற ஒரு திராடகம் இருக்கிறது. திராடகம் என்றால் என்ன? ஒரு பொருளை உற்று நோக்குதல் என்பதாகும். ஒரு பொருளை உற்று நோக்குதல் மூலம் நமது மூளையில் இது ஆக்டிவேட் ஆகி நமது மனதை சாந்தப்படுத்துகிறது.

     நரம்பு மண்டலம்

    நரம்பு மண்டலம்

    நமது உடலில் மூளை என்பது ஒரு சென்சிட்டிவான உறுப்பாகும். இதனுடன் நமது கண்களின் செயல்பாடுகளும் மிகவும் முக்கியம். அந்த கண்களின் பயிற்சி மூலமாக நமது மனதை கட்டுப்படுத்துவதுதான் இந்த திராடகம் ஆகும். இதை நாம் செய்யும் போது நமது நரம்பு மண்டலத்தில் பாராசிந்தட்டிக் சிமுலேஷன் அதிகமாகிறது.

     இதய துடிப்பு

    இதய துடிப்பு

    இதனால் நமது இதய துடிப்பு, மூச்சு எண்ணிக்கை, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்திருக்கிறது. மனம் ஒரு குரங்கு போன்றது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தாவி கொண்டே இருக்கும். அப்போது நம் மனதில் நிறைய நினைவுகள் இருக்கும். அந்த தொடர் நினைவுகளை கட்டுப்படுத்தி நம் மனதை சாந்தப்படுத்தி மன தைரியத்தையும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க இது பயன்படுகிறது.

     கண் பார்வை

    கண் பார்வை

    இந்த திராடகத்தை கொரோனா நோயாளிகள் மட்டுமில்லை, நாமும் இதை செய்யலாம். ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் மாணவர்கள் இந்த கண் சிகிச்சையை செய்யலாம். இதனால் அவர்களின் பார்வைத் திறன் அதிகரிக்கும். இதனுடன் கண் பயிற்சியையும் செய்யலாம். இதன் மூலம் அவர்களது நினைவுத் திறனும் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும் என்றார் தீபா.

    English summary
    Dr Y Deepa says how to calm down our minds during Coronavirus Pandemic situation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X