தூர்வாஷ்டமி விரதம்: செல்வ வளம் பெருகும் கடன் நீங்கும் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்
ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். அருகம் புல்லை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம்.
சென்னை: ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தூர்வாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விநாயகருக்கு அருகம் புல் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும். கடன் பிரச்சினை நீங்கும். மகாலட்சுமியை வழிபட செல்வ வளம் பெருகும், புத்திரபாக்கியம் கிடைக்கும்.
தூர்வாஷ்டமி விரதத்தை யார்வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். குறிப்பாகப் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாகும் இது. பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதம் என்றும் சொல்லலாம்.
தூர்வாஷ்டமி திதி இன்று பிற்பகல் 3.11 மணி முதல் செவ்வாய்கிழமை பகல் 01.09 மணி வரை உள்ளது.
வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

விநாயகர் வழிபாடு
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க" என திருமணம் மற்றும் புதுமணை புகுவிழாக்களில் பெரியோர்கள் வாழ்த்துவதை பார்த்திருப்பீர்கள். அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும்.

கடன் பிரச்சினை நீங்கும்
கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர். அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும் குளிர்ச்சித்தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும். சிறுநீர் பெருக்கும். குடல் புண்களை ஆற்றும். ரத்தத்தை தூய்மையாக்கும் மற்றும் உடலை பலப்படுத்தும், அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அருகம்புல்லை செவ்வாய்கிழமையன்று விநாயகருக்கு சாற்றி வணங்க தீராத கடன்பிரச்சினையும் தீரும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாமல் பலர் இருக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க நம்முடைய முன்னோர்கள் தூர்வாஷ்டமி விரதத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த விரதம் சந்ததியை ஒரு உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல், சந்ததியை வளர்ப்பதற்கும், சந்ததியின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணைபுரியும். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அதிகாலையில் குளித்து விட்டு அருகம்புல் கொண்டு விநாயகரையும், சிவபெருமானையும் சேர்த்து வணங்கி பூஜை விரதத்தை தொடங்க வேண்டும். பூஜையறையில் அவல், பொரி, பால், வாழைப்பழம் படைத்து, விநாயகர் அகவல், 108 போற்றி, சிவபுராணம், தேவாரம், திருவாசகம் படிக்க வேண்டும்.

வம்சம் தழைக்கும் விரதம்
அருகம்புல்லை சந்தனம் குங்குமம் வைத்து வணங்க வேண்டும். ஸெளபாக்கியம் ஸந்ததிம் தேஹி ஸர்வ கார்ய கரீ பவ யதா சாகா ப்ரசாகாபிர் விஸ்த்ருதாஸி மஹீதலே ததா மமாபி ஸந்தானம் தேஹி த்வ மஜராமரம்" என்று சொல்லி பூஜிக்க வேண்டும். ஹே அருகம்புல்லே, நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுகிறாய். எங்களுக்கு சௌபாக்யத்தையும் குழந்தை செல்வத்தையும் தந்து அனைத்து காரியங்களிலும் வெற்றியடைய அருள் புரிய வேண்டும். எவ்வாறு நீ கிளை உபகிளை என்று பரந்து விரிந்து பூமி முழுவதும் பரவுகின்றாயோ அது போன்றே எனது வம்சத்தையும் மகன், மகள், பேரன், பேத்தி அவர்களுக்கு குழந்தைகள் என விரிவடையச் செய்வாயாக என்று கூறி வணங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவனுக்கு விளக்கேற்றி வழிபடுவது அவசியம்.

சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாட்கள் விரதமிருந்து மகாலட்சுமியை வழிபடுவது சோடச லட்சுமி விரதமாகும். இதனால் 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று வாழலாம். இந்த நாட்களில் ஒரு வேளை பகலில் மித உணவு உண்டு, மாலையில் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் அஷ்ட லட்சுமிகளை வணங்கி, நிவேதனம் செய்த பால் பழம் உண்டு விரதம் முடிப்பது பழக்கம் ஆகும். இந்த விரதத்தை கடைபிடித்தால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும். செல்வ வளம், நீண்ட ஆயுள், நல்ல புத்திர பாக்கியம் பெறுவதற்கும், நினைத்த காரியங்கள் கைகூடுவதற்கும் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications