சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவருக்கு சொந்தமான 27 இடங்களில் ரெய்டு.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் தீவிரமாக ரெய்டு நடத்த தொடங்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டது.

இந்த ரெய்டை தொடர்ந்து விஜயபாஸ்கர் மீதும் அவரின் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் வரை இவர் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை ரெய்டில் கூறப்பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில்.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்கள் வீடுகளில்.. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ரெய்டு

ரெய்டு

இந்த ரெய்டின் பரபரப்பு தீரும் முன் இன்னொரு பக்கம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்து வருகிறார்கள். அவருக்கு சொந்தமான வீடு உட்பட 27 இடங்களில் தமிழ்நாடு முழுக்க ரெய்டு நடந்து கொண்டு இருக்கிறது. ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது

வரித்துறை

வரித்துறை

ஏற்கனவே 2016-17ல் இவர் வருமான வரித்துறையின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சேலம் கூட்டுறவு வங்கி மூலம் பல நூறு கோடியை போலி கணக்குகள் தொடங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பண பரிமாற்றம் செய்ததாக இளங்கோவன் அப்போது வருமான வரித்துறை மூலம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பிலும் இவர் இருந்தார். தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவருக்கு சொந்தமான 27 இடங்களில் ரெய்டு.. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!

யார் இவர்

யார் இவர்

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டை தொடர்ந்து இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். இவர் மீதும் இவரின் மகன் பிரவீன்குமார் மீதும் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. 2014 முதல் 2020 வரை ரூ.3.78 கோடி அளவிற்கு வருமானத்திற்கு புறம்பாக இவர் சொத்துகள் சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கை.. முதல்ல அங்க இருந்து ஆரம்பிங்க.. வானதி சீனிவாசன் பொளேர்
    சொத்து உயர்வு

    சொத்து உயர்வு

    முறைகேடாக சொத்து குவித்ததாக வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 6 வருடங்களில் இவரின் சொத்து மதிப்பு 131% அதிகரித்து இருக்கிறது. பினாமிகளின் பெயரில் இளங்கோவனும், அவரது மகனும் ஏராளமாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. முறைகேடாக சொத்து குவித்ததாக வைக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. 6 வருடங்களில் இவரின் சொத்து மதிப்பு 131% அதிகரித்து இருக்கிறது. பினாமிகளின் பெயரில் இளங்கோவனும், அவரது மகனும் ஏராளமாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    DVAC Raids at Tamilnadu Co-Op Bank chief Elangovan house and premises in 27 places. Case has been filed against him and his son.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X