பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம்! அரசு உத்தரவின் அசர வைக்கும் பின்னணி..சூப்பர்
சென்னை: பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், இந்த பணிகளை ஜனவரி 9 முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் இந்த உத்தரவின் பின்னணியில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையிலான முக்கிய விஷயம் உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது.

அதன்படி மார்ச் மாதம் 13 தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. முன்னதாக அடுத்த மாதம் செய்முறைத்தேர்வுகள் துவங்கி நடைபெற உள்ளது.
பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை மற்றும் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 3,169 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து வருகின்றன.
இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய தகவல்களை பெற வேண்டும் என்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு இ-மெயில் உருவாக்கி வழங்கும் பணியை ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
******
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications