சீட் பிரச்சனை கிடக்கட்டும்.. ஓபிஎஸ் டீமுக்கு பெரிய ‘ஷாக்’ கொடுக்க தயாராகும் எடப்பாடி.. அடேங்கப்பா!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரையொட்டி ஒரு அதிரடி நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக ஓபிஒஎஸ் - ஈபிஎஸ் இடையே போட்டி நடந்து வருகிறது.
இரு தரப்பும் சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் அளித்துள்ள நிலையில், சபாநாயகர் இன்னும் தனது முடிவை தெளிவாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தான், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை காலி செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஜூலை 11 சம்பவம்
ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை அதிமுகவிலிருந்து பொருளாளர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். அதேபோல, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகிய எம்.எல்.ஏக்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். தொடர்ந்து எம்.பி ரவீந்திரநாத் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வகித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை பறிக்கவும் சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தார் ஈபிஎஸ்.

சட்டசபை சீட்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிமுக எம்.பியே இல்லை என்றும் லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார் ஈபிஎஸ். ஆனால், அதனை லோக்சபா சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார். அதேபோல, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களின் சீட்களையும் மாற்ற வேண்டும் என்றும் சபாநாயகருக்கு கடிதம் அளித்தார் ஈபிஎஸ். ஆனால், ஓபிஎஸ்ஸும் இதுதொடர்பாக கடிதம் அளித்ததன் காரணமாக இதுவரை சபாநாயகர் அப்பாவு, எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் வரும் அக்டோபர் 17ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், இருக்கை விவகாரம் வெடித்துள்ளது.

ஷாக் கொடுக்க திட்டம்
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி தரும் மற்றொரு நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் வகிக்கும் அரசு பதவிகளை நீக்க கட்சித் தலைவர் உரிமை கோரலாம். அந்தவகையில் ஈபிஎஸ்ஸால் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், அய்யப்பன் ஆகிய 4 பேரின் எம்.எல்.ஏ பதவிகளையும் பறிக்க ஈபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது மட்டும் நடக்காவிட்டால்
சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்காமல், சபாநாயகர் அப்பாவு, ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டால், சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சட்டசபை கூட்டத்தொடரை ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏக்களும் புறக்கணிப்பதாக அறிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதவியை பறிக்க
இந்த முடிவுக்கு மாறாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றால், கட்சி கொறடா உத்தரவை எதிர்த்துச் செயல்பட்டதாக கூறி, அவர்களின் எம்எல்ஏ பதவிகளை பறிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கவும் ஈபிஎஸ் டீம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவர் பதவிக்காக விடாப்பிடியாக ஓபிஎஸ் போராடும் நிலையில், அவரது எம்.எல்.ஏ பதவிக்கே உலை வைக்கும் வகையிலான எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது.

இப்போதே ஏன்?
அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, கட்சி தனது முழு கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகுதான் இந்த நடவடிக்கையில் தீவிரமாக இறங்க வேண்டும் என ஈபிஎஸ் டீம் முன்பு திட்டமிட்டிருந்தது. ஆனால், பொதுச் செயலாளர் தேர்தலை இப்போதைக்கு நடத்த முடியாத சூழல் இருப்பதால், சட்டமன்ற கூட்டத்தொடர் இப்போது வருவதால், ஓபிஎஸ்ஸுக்கும், சபாநாயகருக்கும் நெருக்கடி தரும் வகையில் இந்த ஆக்ஷனில் ஈபிஎஸ் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications