ஆளுநரை பார்த்ததும்.. எடப்பாடி முகம் முழுக்க "சிரிப்பு".. அந்த ஒரு ரியாக்சன்! விழாவில் என்ன நடந்தது?
சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர், அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்துத்துவா குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார். இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது.

மோதல்
ஆளுநர் ஆர். என் ரவிக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதி வருகின்றன. இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார். ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். இதையடுத்தே ஆளுநரின் உரையை நீக்கிவிட்டு உண்மையான உரையை பதிவு செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானம் சட்டசபையில் வெற்றிபெற்ற நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சு நீக்கப்பட்டு, உண்மையான அரசு தயாரித்த உரை சட்டசபை பதிவில் ஏற்றப்பட்டது.

ஆளுநர்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி அனுப்பிய பொங்கல் விழா அழைப்பதில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்று இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியது. 12ம் தேதி, அதாவது நேற்று மாலை இந்த பொங்கல் விழா நடந்தது. இந்த பொங்கல் விழாவிற்கு ஆளுநர் சார்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சட்டசபையில் உள்ள கட்சிகள், முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு சென்றது. இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம்பெற்றது. தமிழ்நாடு- தமிழக வார்த்தை பிரயோகம் சர்ச்சை ஆன நிலையில், ஆளுநர் தற்போது அனுப்பி இருக்கும் இந்த கடிதமும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் இலட்சினையையும் ஆளுநர் ஆர். என் ரவி நீக்கி இருக்கிறார். இதுதான் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

புறக்கணிப்பு
இதையடுத்து இந்த நிகழ்வை நேற்று ஆளும் திமுக புறக்கணித்தது. அதே சமயம் திமுகவை சேர்ந்த கூட்டணி கட்சிகளும் நிகழ்வை புறக்கணித்தன. ஆனால் அதிமுகவின் இரண்டு அணிகளும் நிகழ்விற்கு சென்றன. பாஜக நிர்வாகிகளும் நிகழ்விற்கு சென்றன. அதிமுகவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவரின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் சென்றனர். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களும் சென்றனர். இந்த நிகழ்வில் ஆளுநரை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன்தான் அதிக கவனம் பெற்றுள்ளது.

ரியாக்சன்
ஆளுநரை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி, முகம் முழுக்க சிரிப்போடு பெரிய ரியாக்சன் கொடுத்தார். முகம் முழுக்க சிரிப்பு இருக்க, ஆளுநரை பார்த்து எடப்பாடி அன்பாக புன்னகைத்தார். பூங்கொத்து கொடுத்து அவருக்கு பொங்கல் வாழ்த்து சொன்னார். இந்த நிகழ்வு முழுக்கவே எடப்பாடி பழனிசாமி ஆளுனருடன் நெருக்கமாக, அன்பாக காணப்பட்டார். இறுதியில் பொங்கல் சாப்பிடும் நிகழ்வின் போதும் கூட ஆளுநர் ஆர். என் ரவியுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாக காணப்பட்டார். ஆளுநர் ஆர். என் ரவி இந்த விழாவிற்கான அழைப்பிதழில் தமிழகம் என்ற பெயரை பயன்படுத்தியது பெரிய சர்ச்சையாகி உள்ள நிலையில்தான் நேற்று இந்த விழா நடைபெற்றது.

திமுக
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீது பல்வேறு விஷயங்களில் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளும் திமுகவிற்கு ஆளுநர் ஆர். என் ரவிக்கு இடையில் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. முக்கியமாக நியாயமான பதவியில் இருக்கும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பற்றியும், கொள்கைகள் பற்றியும் பேசி வருவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஆளுநர் அரசியல் கொள்கைகளை பற்றி பேசுவதுதான் திமுகவின் கோபத்திற்கு காரணம் ஆகி உள்ளது. இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். நேற்று முதல்வர் ஸ்டாலினும் ஆளுநருக்கு எதிராக கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications