சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க அப்பவே சொன்னோம்.. கேக்கலையே! ஓபிஎஸ் & கோவை கிண்டலடிக்கும் இபிஎஸ் & கோ! இப்போதைக்கு முடியாது?

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு சென்ற நிர்வாகிகளை தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிண்டல் அடித்து வருவதாகவும் தற்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என கூறி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

"ஒண்ணுமே புரியல உலகத்திலே" என்பது போல் தான் இருக்கிறது அதிமுகவில் இருக்கும் கடை கோடி தொண்டர்களின் நிலை. ஓபிஎஸ் இபிஎஸ் என இரு தலைவர்களின் அதிகார போட்டியால் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது அவர்கள் தான் என்கிறார்கள் கட்சியில் நடுநிலை வகிக்கும் நிர்வாகிகள்.

அதிமுகவை பொறுத்தவரை தற்போது நீதிமன்ற வழக்குகள் காரணமாக மாறி மாறி ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு கிடைத்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இறுதியாக என்ன தீர்ப்பு வருகிறதோ அதுதான் உறுதியான தீர்ப்பாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு- செப்.9-ல் விசாரணை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு- செப்.9-ல் விசாரணை

அரசியல் கிளைமேட்

அரசியல் கிளைமேட்

இப்படி மாறி மாறி அரசியல் கிளைமேட் மாறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ மிக மிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர். காரணம் கட்சியில் ஏற்கனவே சொன்னபடி கட்சியில் 99 சதவிகித தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் கட்சி அமைப்பு ரீதியாக அவர் தான் மிக வலுவான நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக என்ன செய்தாலும் அவரை அதிமுகவில் அசைக்க முடியாது.

ஒரே ஆதரவு

ஒரே ஆதரவு

அதே நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம் தரப்புக்கு கட்சி ஆதரவு இல்லையெனினும், அவர் வகித்து வந்த பதவிகள் தான் அவருக்கு ஒரே சப்போர்ட்டாக இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சட்டபோராட்டங்களை மேற்கொள்ள முடியும் ஆனால் கட்சியில் அவரதுநிலை கேள்விக்குறியாகவே உள்ளது. இப்படி தலைவர்கள் இருவருக்கான மோதலால் நிர்வாகிகள் இரண்டாக பிளவு பட்டுக் கிடக்க தொண்டர்கள் நிலை தான் பரிதாபகரமாக உள்ளது.
அதே நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம் தர்ப்புக்கு கட்சி ஆதரவு இல்லையெனினும், அவர் வகித்து வந்த பதவிகள் தான் அவருக்கு ஒரே சப்போர்ட்டாக இருக்கிறது. இதனை வைத்து தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என சட்டபோராட்டங்களை மேற்கொள்ள முடியும் ஆனால் கட்சியில் அவரதுநிலை கேள்விக்குரியாகவே உள்ளது. இப்படி தலைவர்கள் இருவருக்கான மோதலால் நிர்வாகிகள் இரண்டாக பிளவு பட்டுக் கிடக்க தொண்டர்கள் நிலை தான் பரிதாபகரமாக உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

இதனிடையே கடந்தமுறை உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகம் அடைந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பலனாக ஓரளவு ஒன்றிய செயலாளர்களும் பொதுக்குழு உறுப்பினர்களும் ஒ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் தீர்ப்பால் அந்த முயற்சி முற்றாக நின்று போய் உள்ளது. நேற்று வரை ஓ பன்னீர் செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த முன்னாள் அமைச்சர்கள் கூட தற்போது அவரது அழைப்பை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மீண்டும் பேச்சுவார்த்தை

மீண்டும் பேச்சுவார்த்தை

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களை தொடர்பு கொண்டு நாங்கள் எவ்வளவோ சொல்லி கேட்கவில்லை தற்போது பார்த்தீர்களா? எடப்பாடி அணி தான் ஜெயித்திருக்கிறது என கிண்டல் அடித்து வருகின்றனர் மேலும் தற்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை மீண்டும் வந்தால் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என கூறி வருகின்றனர். இதன் காரணமாக வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் எனவே அவசரப்பட வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பு அவர்களை சமாதானப்படுத்தி வருகிறது.

English summary
It has been reported that Edappadi Palaniswamy supporters are now contacting the administrators who went to the OPS side and taunting them over the phone and saying that nothing has gone wrong now and they will join them if they come again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X