இப்போதைக்கு வேணாம்! கையில் சாவி..ஆனாலும் அதிமுக அலுவலகம் போகலை! சேலத்துக்கு வண்டியை விட்ட எடப்பாடி!
சென்னை : அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள், தலைவர்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு சென்றுள்ள நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக அலுவலக சாவி
இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

கெடு நிறைவு
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள், தலைவர்கள், செல்ல சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால் அதிமுகவின் தலைமைக் கழக சாவி எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளதாலும் நாளை அதிமுக தொண்டர்களுடன் தலைமை கழகம் செல்வார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்திற்கு வந்துள்ளார்.

ஆதரவாளர்கள்
அவரை காண்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜமுத்து, சுந்தரராஜ், மணி ,பாலசுப்பிரமணியம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் குவிந்துள்ளனர்.

என்ன காரணம்?
சென்னை அதிமுக அலுவலகம் செல்லாததற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரித்த போது ஒரே காரணம் மட்டுமே உள்ளது சேலம் நிர்வாகிகள். அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதிமுகவில் அதிகாரம் தனது கைக்கு மீண்டும் கிடைத்துள்ளதாக ஓ பன்னீர்செல்வம் கருதி வருகிறார் இதன் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைக்கு வேண்டாம்
காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது நன்றாக இருக்காது என எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும் நாளை அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் குவிய வாய்ப்பு இருப்பதால் தேவையில்லாத பிரச்சினைகள் எழும் என்பதை கருத்தில் கொண்டு சாவி இருந்தும் சேலத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். தற்போதைக்கு இந்த விவகாரத்தை ஒத்திவைத்து மேல்முறையீட்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவெடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications