எடப்பாடி ‘ஜூட்’ சசிகலாவுக்கு ‘ரூட்’! ஸ்லீப்பர் செல் ‘மாஜிக்கள்! யார் அந்த 4 பேர்! தடதடக்கும் அதிமுக!
சென்னை : சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நிகழ்ச்சி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் முக்கிய முன்னாள் அமைச்சர்களில் சிலர் சசிகலாவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக வெளிவந்துள்ள தகவல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அதிமுகவின் எடப்பாடி ஓபிஎஸ் என காரசார விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறிவரும் சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து அவரது ஆதரவாளர்களுக்கே தெரியாமல் தான் இருக்கிறது.
ஒருபுறம் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக ஆகிவிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய் நகர்த்தி வரும் நிலையில் சட்ட போராட்டங்கள் மூலம் அதனை நிறுத்தி விடலாம் என நினைக்கிறார் ஓபிஎஸ்.

ஆன்மீக சுற்றுப்பயணம்
அதே நேரத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் நிர்வாகிகள் சந்திப்பு என வழக்கம் போலவே அதிரடி என்ற பெயரில் சாதாரண அரசியல் நடத்தி வருகிறார் சசிகலா என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். சசிகலா ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இணைவது உறுதி என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான வைத்தியலிங்கம் சசிகலாவை சந்தித்து பேசினார். பிறந்த நாளுக்காக வாழ்த்து பெறும் சாதாரண நிகழ்வு தான் என அவர் கூறினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது என்கின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.

மறைமுக பேச்சுவார்த்தை
சசிகலாவும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திப்பது குறித்து உறுதியான தகவல்கள் எதையும் கூறவில்லை என்றாலும் மறைமுகமாக ஓபிஎஸ் தரப்புக்கு பல்வேறு கட்டளைகளையும் நிபந்தனைகளையும் விதித்துள்ளார். குறிப்பாக கோவை அல்லது சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி இணைப்புகள் நடத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டிருக்கிறார் . அதோடு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்தாலும் தனக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிர்வாகிகளை அவர் நிச்சயம் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதற்காக ஏற்பாடுகள் திரை மறைவில் நடைபெற்று வரும் நிலையில் அந்த இணைப்பு நிகழ்ச்சி இருக்கும் என்கின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கரமாகவும் கடந்த காலங்களில் பொதுக்குழு கூட்டத்தின் போது மிகுந்த நம்பிக்கையுடன் பணியாற்றிய இரு முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னாள் அமைச்சர்கள் சசிகலா தரப்புக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருப்பதாகவும் வெளிப்படையாக அரசியலுக்கு சசிகலா வரும்போது தங்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும் எனக்கூறி இருக்கின்றனர். யார் அவர்கள் என விசாரித்த போது கிடைத்த தகவல்கள் சற்றே ஆச்சரியமாக தான் இருந்தது. கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றதில் இருந்தே மிகவும் விசுவாசமாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருந்தவர்கள் தான் தற்போது சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட போகிறார்கள்.

4 அமைச்சர்கள்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் என சசிகலா தரப்புக்கு செல்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் வேறு சில அமைச்சர்களை அழைத்து வருவதற்கும் அவர்கள் தயாராக உள்ளனர் என மன்னார்குடி வட்டாரங்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக பேசிய முன்னாள் நிர்வாகி ஒருவர்," சசிகலா அதிமுகவில் அதிகாரம் செலுத்தப் போகிறார் என உறுதியான முடிவு வந்தால் மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் அவருக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு நிகழும் போது தான் அதற்கான சாத்திய கூறுகள் இருக்கும்" என்றார்.
-
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications