டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு உடனே விண்ணப்பிங்க.. ஜூன் 30 கடைசி நாள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை: டாக்டர் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியுடையோர் ஜூன் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்தினாலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 'அப்துல் கலாம் விருது' வழங்கப்பட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதைப் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கூடிய பாராட்டுச் சான்றிதழும், தங்கப் பதக்கமும் வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியுடையவர்கள் ஆவர்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் https://awards.tn.gov.in இணையதளத்தில் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலன் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், 8 கிராம் தங்கத்திலான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியான நபரை, தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications