விரைவில் ஒரு பூதாகரம் வெடிக்கும்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைக்க.. புதிய ரூட் எடுத்த அமலாக்கத்துறை!
சென்னை: செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்ய துடிக்கிறது அமலாக்கத் துறை. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதில் நடந்த மோசடியில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறை சென்று 471 நாட்களுக்குப்பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்ததும் மீண்டும் அமைச்சராகியிருக்கிறார் அவர்.
இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற்றாலும், வழக்கை விரைந்து நடத்தி செந்தில் பாலாஜிக்கு தண்டனை பெற்றுத் தரும் வகையில் இப்போதும் சீரியஸ் காட்டி வருகிறது அமலாக்கத் துறை.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில்.. அவருக்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. 471 நாட்களுக்கு பின் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
நீதிபதி ஓகா, தீர்ப்பை அறிவிக்கும் போது, அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்தார். அவர்கள் செய்த சில செயல்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில்., கடுமையான ஜாமீன் விதிகள் மற்றும் விசாரணையில் தாமதம் ஆகியவற்றை ஒன்றாக பயன்படுத்த முடியாது. ஜாமீனும் கொடுக்க முடியாது.. விசாரணையும் தாமதம் செய்வோம் என்று சொல்வது சரியாக இருக்காது . இரண்டிற்கும் நீங்கள் ஆசைப்பட முடியாது., என்று உச்சநீதிமன்றம் . அதாவது அமலாக்கத்துறை வழக்கை மெதுவாக விசாரிக்கிறது. வேகமாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தார். இதையடுத்தே தற்போது செந்தில் பாலாஜி வழக்கில் சீரியஸ் காட்டி வருகிறது அமலாக்கத் துறை.
அதன்படியே அமலாக்கத்துறை புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, பண மோசடியில் பாதிக்கப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் சூழலில், இதே பாணியில் அதாவது பாதிக்கப்பட்ட நபர் தனது மனுவில் கூறியுள்ள காரணங்களையே கொஞ்சம் விரிவாகச் சொல்லி நாமும் ஒரு மனு தாக்கல் செய்யலாமா? என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
இது குறித்து, மத்திய நிதி அமைச்சகத்தின் யோசனையைக் கேட்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் செ.பா.வின் சகோதரர் அசோக்.
அவருக்கு ஏற்கனவே பலமுறை அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். தற்போது செ.பா. ஜாமீனில் வெளியே வந்து அமைச்சராகவும் ஆகி விட்ட நிலையில், அசோக்கிற்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் அவரை கைது செய்ய திட்டமிடுகிறது அமலாக்கத்துறை. இதற்காக, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பி வைக்கவும், அதற்கு அவர் வழக்கம்போல ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால் அவரை கைது செய்ய நீதிமன்றத்தை அணுகவும் அமலாக்கத் துறையினர் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. அசோக்கை மையப்படுத்தி விரைவில் ஒரு பூதாகரம் வெடிக்கலாம் என்று செந்தில் பாலாஜிக்கு சொல்லப்பட்டதுள்ளதாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications