சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டி.. 29 வயது சிவபிரசாந்த் வேட்பாளராக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெறும் 29 வயது மட்டுமே நிரம்பிய சிவபிரசாந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இதனை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளத.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை.. ஈரோட்டில் குவியும் அதிமுக நிர்வாகிகள்..மாலை வேட்பாளர் அறிவிப்பு?எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை.. ஈரோட்டில் குவியும் அதிமுக நிர்வாகிகள்..மாலை வேட்பாளர் அறிவிப்பு?

அதிமுக தீவிர ஆலோசனை

அதிமுக தீவிர ஆலோசனை

இந்த தேர்தலில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறார். ஆனந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, நாம் தமிழர், ஓ பன்னீர் செல்வம் அணியினரும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமமுக ஆலோசனை

அமமுக ஆலோசனை

இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தன. ஈரோடு இடைத்தேர்தலில் தானும் கூட போட்டியிட வாய்ப்புள்ளது என டிடிவி தினகரனே கூறினார். இதனால் அவரும் இடைத்தேர்தலில் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில் நாளைய அமமுக வேட்பாளர் அறிவிப்பு என்பது அதிக கவனம் பெற்றது.

சிவிபிரசாந்த் வேட்பாளராக அறிவிப்பு

சிவிபிரசாந்த் வேட்பாளராக அறிவிப்பு

இந்நிலையில் தான் இன்று சென்னையில் டிடிவி தினகரன் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையை தொடர்ந்து டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் போட்டியிடுவதாக அறிவித்தார். இவருக்கு வயது வெறும் 29 தான். இவர் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

திமுகவை வீழ்த்தவே..

திமுகவை வீழ்த்தவே..

மேலும் டிடிவி தினகரன் கூறும்போது, ‛‛ திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்தற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். 290 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்'' என்றார்.

English summary
Amma Makkal Munnetra Kazhagam has announced Sivaprashant as a candidate for the Erode East Assembly Constituency by-election. TTV Dhinakaran, General Secretary of Amma Makkal Munnetra Kazhagam, said this in Chennai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X