மனசுக்குள் கார் ரேசர்னு நினைப்பு.. எங்க ராசா போற.. எங்ககிட்டயேவா.. சேஸ் செய்து பிடித்த சென்னை போலீஸ்
சென்னை : மனசுக்குள் கார் ரேசர்னு நினைப்பு.. பிரபல இருசக்கர வாகன திருடன் படப்பை வினோத், சென்னை தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் காரினை திருடி கொண்டு தடுப்புகளை உடைத்துக் கொண்டு தப்பினார். அவரை சினிமா பாணியில் போலீசார் மடக்கி பிடித்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
Recommended Video
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (62) விமான நிலையத்தில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுறிந்து வருகிறார்.
கடந்த 30ம் தேதி அன்று காலை வீட்டில் மின் விளக்குகள் எரிந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருபதை கண்டு கருப்பையா மற்றும் அக்கம் பக்கத்தினர் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

ஜிபிஎஸ் கருவி
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலிசார் காரின் என்னை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் இருப்பதை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டுபிடித்த போலீசார் உடனடியாக அங்குள்ள ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிக்கியி பிரபல திருடன்
இதனையடுத்து தடுப்புகளையும் உடைத்து கொண்டு வேகமாக சென்ற காரை விரட்டி பிடித்த போலிசார் கொள்ளையனை சுற்றி வளைத்து கைது செய்து பீர்கன்காரனை போலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் நடத்தபட்ட விசாரனையில் பிரபல இருசக்கர வாகன திருடன் படப்பை வினோத் (19) என்பது தெரியவந்துள்ளது.

நகை பணம்
மேலும் அவனிடமிருந்து தங்க நகைகள் ,15,000 ரொக்க பணம் மற்றும் காரினை பறிமுதல் செய்த போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். சென்னையில் குற்றவாளிகளை

'ஷூ' க்கள் திருட்டு
இன்னொரு குற்ற சம்பவம் : சென்னை பெரியமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 'ஷூ'க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரியமேடு பகுதியில் முகமது அப்தாப் என்பவர் 'ஷூ'க்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 'ஷூ'க்கள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் இருக்கிறது. கடையில் வேலை செய்யும் ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக கடை ஊழியர்கள் 4 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications