பட்ஜெட்: விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றம்.. எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இல்லை.. விமர்சித்த வைகோ!
சென்னை : மத்திய அரசின் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இல்லை, ஏமாற்றமே மிஞ்சுகிறது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை, வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது என வைகோ விமர்சித்துள்ளார்.
2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சுவதாக விமர்சித்துள்ளார்.

இலக்கை எப்படி எட்ட முடியும்?
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்று கூறி உள்ளார். ஆனால், பொருளாதார ஆய்வறிக்கையில் பண வீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாணடி 6.8 விழுக்காடாக இருக்கும என்று கணித்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு குறைந்து வரும் சூழலிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து வரும் நிலையிலும், 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி இலக்கை எப்படி எட்ட முடியும்?

விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம்
வேளாண்மைத் தொழிலை ஊக்குவிக்க எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. வேளாண் விலைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்தும், வேளாண் கடன் வட்டி குறைப்பு பற்றியும் அறிவிப்பு இல்லை. உற்பத்தித் தொழில்துறை சரிவிலிருந்து மீண்டு எழ உறுதியான திட்டங்கள் எதுவும் இல்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் வேலைவாய்ப்பை அதிகம் அளிக்கும் துறைகள். ஆனால் அவற்றின் மேம்பாட்டிற்கு 15 விழுக்காட்டிற்கு மேல் ஜி.எஸ்.டி வரி கூடாது என்று வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறவில்லை.

அறிவிப்பு இல்லை
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க வெறும் 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது போதாது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 விழுக்காடு குறைந்திருப்பதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 விழுக்காடு வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது. எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரிவிலக்கு அளிக்கப்படாததைப் போல இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறையினர் கோரினர். அதுபற்றிய அறிவிப்பும் இல்லை.

பயன்பெற்ற இளைஞர்கள் எவ்வளவு பேர்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறி இருக்கிறார். 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய பா.ஜ.க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஆனால் இதனால் பயன்பெற்ற இளைஞர்கள் எத்தனை லட்சம் பேர் என்று மத்திய அரசு அறிவிக்குமா? வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.

பாஜக உணர வேண்டும்
தனிநபர் வருமான வரி வரம்பு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் வரவு - செலவு திட்டத்தில் 7 முக்கிய கூறுகளை இலக்காக அறிவித்துள்ளார். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, ஏழைகளின் முன்னேற்றம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம், உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை நிறைவேற்ற மாநில அரசுகளின் பொறுப்பும், கடமையும் அதிகம் இருக்கிறது என்பதையும் பாஜக அரசு உணர வேண்டும். மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் பாரபட்சம் கூடாது. ஜி.எஸ்.டி நிதி அளிப்பதையும் தாமதிக்கக் கூடாது.

மீண்டும் மீத்தேன் திட்டம்?
தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்தால்தான் உண்மையான நிலை தெரியும். பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டங்களுக்கு 19700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் காவிரிப் பாசனப் படுகை மாவட்டங்களில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு திட்டப் பணிகளை மத்திய அரசு செயல்படுத்த முனைப்பு காட்டலாம். கூட்டுறவு சங்கங்கள் தரவு தளம் அமைப்பதன் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிய அரசு முழுமையாகக் கொண்டு செல்லும் நிலைதான் உருவாகும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications