சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. பல குடிசைகள் எரிந்து நாசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்-வீடியோ

    சென்னை: சென்னை டுமீல் குப்பத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 25க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது.

    சென்னையில் மீனவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று டுமீங் குப்பம். குடிசைபகுதியாகும். டுமீங் குப்பம், நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் வசிக்கக் கூடிய குடிசைவாசிகளுக்கு கண்ணகி நகரில் வீடு கட்டித் தருவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    Fire accident happened at Dumil Kuppam

    இது ஒருபக்கம் என்றாலும் இன்னும் பல நூறு குடும்பங்கள், டுமீல் குப்பம் குடிசைகளில்தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், இன்று, அதிகாலை திடீரென இந்த குடிசை பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு குடிசை வீட்டில் பிடித்த தீ பிற வீடுகளுக்கும் மளமளவென பரவியது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதி முழுக்க அதிகாலையில் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    Fire accident happened at Dumil Kuppam

    சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று முதல்க்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    Fire accident happened at Dumil Kuppam

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்; வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்து கொடுக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் இருப்பதால் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொண்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார் .

    English summary
    Fire accident happened at Dumil Kuppam in Chennai causes burn of more than 100 huts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X