இலங்கைக்கு அடுத்து இந்தோனேசியா.. இறந்த குமரி மீனவர்! சர்வதேச நீதிமன்றத்தை நாட சொல்லும் வேல்முருகன்
சென்னை: இந்தோனிஷியாவில் குமரி மீனவர் மரணம் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்வதாக அக்கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, குமரி மீனவ சகோதரர்கள் 8 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
குமரி மீனவர்கள் சென்ற படகு கடல் எல்லையை தாண்டி இந்தோனேஷியா கடல் பரப்பு பகுதிக்கு சென்றுவிட்டதாக, அந்நாட்டு கடற்படையால் படகும் அந்த 8 குமரி மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேசியா கடற்படை
தொடர்ந்து, அவர்கள் இந்தோனேஷியா சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த சில நாட்களில் நான்கு மீனவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய மீனவ சகோதரர்கள் தூத்தூரை சேர்ந்த மரிய ஜெசின் தாஸ், பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல், திருவனந்தபுரம் வெட்டுதுறையை சேர்ந்த சிவனின், மன்னாட்டு பகுதியை சேர்ந்த ஜோமோன் ஆகிய நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக உடல் நிலை பாதிக்கப்பட்டனர்.

மீனவர் மரணம்
குறிப்பாக, மரியஜெசின் தாஸ் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவர் திடீரென மே 20ஆம் தேதி மரணமடைந்தார். சமீபத்தில், மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய உடற்கூராய்வு அறிக்கையில், மீனவ சகோதரர் மரியஜெசின் தாசின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றம்
இதன் மூலம், மரியஜெசின் தாஸை இந்தோனேசிய அதிகாரிகள் அடித்து துன்புறுத்தி இருப்பது தெரிய வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தில் வழங்குப்பதிவு செய்ய தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இந்தியா, இலங்கை கடற்படை
மேலும், இந்தியா, இலங்கை, இந்தோனிஷியா உள்ளிட்ட நாடுகளின் கடற்படையால், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், ஒன்றிய அரசுடன், தமிழ்நாடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications