பிளாஷ் பேக் 2022: ஒற்றைத்தலைமை..வீதிக்கு வந்து தனிக்கட்சி தொடங்கட்டும் வரை..ஓபிஎஸ் விட்ட சவால்கள்
சென்னை: சில சம்பவங்கள் மறக்க முடியாதவை..அதிமுகவில் கடந்த ஆறு மாத காலங்களாக நிகழ்ந்து வரும் சம்பவங்கள் ஊடகங்களில் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளன. கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தயாரான போது வெடித்த ஒற்றைத்தலைமை விவகார சர்ச்சை ஓபிஎஸ்..இபிஎஸ் என்ற இரண்டு அணிகளாக பிரித்து விட்டது. தினம் தினம் அறிக்கைகள்..போட்டி நிர்வாகிகள் நியமனம்..எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான சவால்கள் என தினம் தினம் ஊடகங்களில் பேசு பொருளாக மாறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். 2022ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேசிய பேச்சுக்களையும் அவரது சவால்களையும் சற்றே திரும்பி பார்க்கலாம்.

எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி அதிமுக. மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வராக தமிழகத்தை ஆண்ட எம்ஜிஆர் கடந்த 1987ஆம் ஆண்டு உடல்நலக்குறைவினால் மரணமடையவே கட்சிக்கு யார் தலைமை என்ற சிக்கல் உருவானது. ஜானகி, ஜெயலலிதா என இரண்டு அணிகளாக பிரியவே, ஆட்சியை பறிகொடுத்தது. கட்சியின் கொடியும் சின்னமும் முடக்கப்பட்டது.
ஜெயலலிதா தலைமையின் கீழ் அதிமுக வந்த பின்னர் அசைக்கமுடியாத கோட்டையாக மாற்றினார் 1991 முதல் 2021 வரை நான்கு முறை அரியணையில் அதிமுகவை அமர வைத்தார் ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் மரணமடையவே அதிமுகவில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அவர் மறைந்து சில மாதங்களிலேயே கட்சியில் தலைமைப்பதவிக்கான மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது. கட்சியின் பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் ஆசைப்பட்டார் சசிகலா. இதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். கட்சி பிளவு பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குப் போக யாருமே எதிர்பார்க்காமல் முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் கட்சியையும், ஆட்சியையும் தன் வசமாக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணையவே துணை முதல்வர் பதவியும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சந்தித்தது. ஆளுங்கட்சி வரிசையில் இருந்த அதிமுக எதிர்கட்சி வரிசைக்கு மாறியது. எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்கட்சித்தலைவரானார்.

ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவில் அண்ணன் தம்பிகளாக இரட்டைக்குழல் துப்பாக்கிளாக வலம் வந்தனர் கடந்த ஜூன் மாதம் அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில்தான் ஒற்றைத்தலைமை என்ற குரல் அதிமுகவில் ஓங்கி ஒலித்தது. ஜூன் 23ஆம் தேதி கூடிய பொதுக்குழுவில் மேடையிலேயே அவமானப்படுத்தப்பட்டார் ஓ.பன்னீர் செல்வம். பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறிய போது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.
ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கே வன்முறை அரங்கேறியது. அதிமுக அலுவலகம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்டது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. எம்ஜிஆர் மாளிகையில் அரங்கேறிய வன்முறைகள் உண்மை தொண்டர்களின் கண்களில் ரத்தக்கண்ணீரை வரவழைத்தது.
அதே நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவை விட்டு ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. அதை ஏற்காத ஓ.பன்னீர் செல்வம், தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவை விட்டு எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக கூறினார். மாறி மாறி கட்சியில் நிர்வாகிகளை போட்டியாக நியமித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

கடந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அதை ஏற்காத சபாநாயகர், எதிர்கட்சி துணைத்தலைவர் நாற்காலியை ஓ.பன்னீர் செல்வத்திற்கு கொடுத்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் என்று ஓ.பன்னீர் செல்வத்தின் மீது குற்றச்சாட்டை முன் வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், தான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயார் என்று சவால் விட்டார். பழனிச்சாமியால் நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர் அரசியலை விட்டு விலகுவாரா என்றும் சவால் விட்டார்.
இந்த நிலையில்தான் தன்னால் நியமிக்கப்பட்ட 88 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இன்றைய தினம் ஆவேசமாகவே பேசினார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று தீர்மானம் கொண்டு வந்தோம், அந்த தீர்மானம் ரத்து செய்ய மனம் எப்படி வந்தது?அந்த மகா பாவிகளை இந்த நாடு மன்னிக்காது. ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் என்று தொண்டர்கள் மனதில் ஒலித்து கொண்டு இருக்கிறது என்றார். ஓ.பி.எஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது, என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது. தைரியம் இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி வீதிக்கு வந்து தனிக் கட்சி தொடங்கி பார் என சவால் விடுத்துள்ளார். இந்த சவாலுக்கு வரும் 27ஆம்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ள எடப்பாடி பழனிச்சாமி பதில் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications