சொட்ட சொட்ட நனைந்த சென்னை! ஒரே இரவில் புரட்டி போட்ட கனமழை! பெங்களூருக்கு யூடர்ன் போட்ட விமானங்கள்!
சென்னை : சென்னையில் இன்று இரவு பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமானதோடு துபாய் பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
தமிழகத்தின் பிற பகுதிகளான திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் மட்டும் வழக்கமாக கடும் வெயில் கொளுத்தியது.

சென்னை வானிலை
குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக மே மாதத்தில் இருப்பது போல வெயில் அதிக அளவில் இருந்த நிலையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் தூக்கம் இன்றி தவித்தனர் . இன்றும் வழக்கம்போல் சென்னையில் நண்பகலை கடும் வெயில் கொளுத்தியது.

வெளுத்து வாங்கிய கனமழை
இந்நிலையில் மாலை நேரத்தில் திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டு சென்னை நகரின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 7 மணிக்கு மேல் திடீரென சென்னை வானிலை பெரும் மாற்றம் ஏற்பட்டு இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, கேகே நகர், அசோக் பில்லர், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான காசிமேடு ராயபுரம் பூந்தமல்லி போரூர் வேலப்பன்சாவடி மாங்காடு மவுலிவாக்கம் குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை வெளுத்து வாங்கியது.

குளிர்ச்சியான காலநிலை
இதனால் நகரின் பல பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வரும் நிலையில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இரவு எட்டு மணி முதல் 10:00 மணி வரை சென்னை நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சாலை, மெரினா கடற்கரைச் சாலை, ராயபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

விமான சேவை பாதிப்பு
இதனிடையே கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக இருக்கும் நிலையில் துபாய் பக்ரைன் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இன்று சென்னை தினம் என்பதால் கன மழை பெய்தாலும் மகிழ்ச்சியே என்கின்றனர் சென்னைவாசிகள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications