எனக்கே பதவி இல்லையா? கட்சியை அழிக்கும் ஓபிஎஸ்..! ‘அவருக்கு’ தான் தகுதி! போட்டுத் தாக்கிய நட்டர்ஜி..!
சென்னை : அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விரும்புகின்றனர், ஒற்றை தலைமை ஏற்க தகுதியானவர் பழனிசாமி மட்டுமே எனவும், தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழிக்கும் நிலைக்கு ஓபிஎஸ் சென்றுவிட்டார் என அதிமுக முன்னாள் எம்பி நட்டர்ஜி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே கூறலாம் கட்சியில் இருக்கும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 80% என்ற எண்ணிக்கையிலிருந்து தொண்ணூற்று ஐந்து சதவீதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தரும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முன்னாள் எம்பி நட்டர்ஜி
இந்நிலையில் அதிமுக கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான நட்டர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு எம்ஜிஆர் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் இயக்கம் உச்சம் அடைந்தது. இந்த கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டதன் காரணமாக தொண்டர்கள் பல்வேறு குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி அவசியம்
அவருடைய குழப்பம் நீங்க கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியம் , அதிமுக ஒரு பேரியக்கம் அது நல்ல முறையில் வளர எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றால் வரக்கூடிய தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். இரட்டைத் தன்மை இருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் தொண்டர்களின் குழப்பத்தை நீக்க கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்.

வெற்றியும் பெற முடியும்
அவரால் தான் இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல முடியும். வரும் தேர்தலில் வெற்றியும் பெற முடியும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியையே ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர் எனவே அவர்தான் இந்த இயக்கத்தின் தலைவராக வரவேண்டும் .ஓபிஎஸ் சுயநலவாதி என்று கட்சித் தொண்டர்கள் நினைக்கின்றனர். வணங்கி பணிபவர்கள் எங்களுக்கு தேவையில்லை. துணிச்சலாக தொண்டர்களை பாதுகாக்கக்கூடிய தலைவரே இப்போது அதிமுகவிற்கு வேண்டும். இரட்டை தலைமையால் தொண்டர்களுக்கு எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை.

ஓபிஎஸ் வேண்டாம்
ஓபிஎஸ் கட்சியில் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழித்துவிடுவோம் என்ற மிரட்டும் தொனிக்கு போய் விட்டார் இது ஏற்புடையது அல்ல. ஓபிஎஸ் பின்னணியில் சசிகலாவின் கை உள்ளது. ஓபிஎஸ் தனது மகனை மட்டுமே ஜெயிக்க வைத்துள்ளார். தனது மகனை ஜெயிக்க வைத்த அவருக்கு கூட 2 எம்பி ஜெயிக்க வைக்க தெரியாதா? அதை செய்யவில்லையே. ஓபிஎஸ் இடம் கட்சியை கொடுத்தால் அவர் கட்சியை பிஜேபிக்கு கொண்டு சேர்த்துவிடுவார்." என ஆவேசமாக கூறினார்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications