ஓபன் சேலஞ்ச்..! எடப்பாடி பழனிச்சாமியை மோடி வழிநடத்த மாட்டார்..! வெளுத்து வாங்கிய புகழேந்தி..!
சென்னை : மனதிற்குள் காழ்புணர்ச்சியை வைத்துக் கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி எனவும், பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்த முடியாது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும் முன்னாள் செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "கட்சியில் இருந்து நீக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று பன்னீர்செல்வத்தை சந்தித்தேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது.

அரசியலில் சர்வாதிகாரி
அரசியலில் ஒரு சர்வாதிகாரி போல் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார். சசிகலா பழனிச்சாமிக்கு ஆட்சியை கொடுத்தார். ஆனால் அவர் விசுவாசமாக இருக்கவில்லை. மனதிற்குள் காழ்புணர்ச்சியை வைத்துக் கொண்டு எங்களை போன்றவர்களை கட்சியிலிருந்து நீக்கியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 4 ஆண்டுகளாக கொள்ளையடித்தவர்தான் பழனிச்சாமி.

இரட்டை இலைச் சின்னம்
இரட்டை இலைச் சின்னம் இல்லாமல் பழனிச்சாமி வெளியே போய் நின்றால் 500 ஓட்டுகள் கூட வாங்க முடியாது. எதிர்க்கட்சிப் பதவியை வாங்கி எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருடம் ஆகிறது, திமுகவில் ஊழலைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளாரா? பாஜக தலைவர் அண்ணாமலையை எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லும் சூழலை உருவாக்கியவர் எடப்பாடி பழனிச்சாமிதான்.

பிரதமர் நரேந்திர மோடி
எடப்பாடி பழனிச்சாமி போன்ற முட்டாள்களை பிரதமர் நரேந்திர மோடி வழி நடத்தமாட்டார். அதிமுகவை விட்டு எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வெளியேற வேண்டும். இரட்டைக் குழல் துப்பாக்கி, இரட்டை கோபுரம் என்று அப்போது கூறிய ஜெயக்குமார், இப்போது எப்படி ஒற்றைத் தலைமையைப் பற்றி பேசுகிறார் என புரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி துரோகி
சேலம் மாவட்ட அதிமுகவை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி. பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் நடத்த முடியாது. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி இல்லை; ஓ.பன்னீர்செல்வம்தான் உள்ளார்" என்று புகழேந்தி காட்டமாக தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications