சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு மூன்று வழக்குகளிலும் ஜாமின்... சிறையில் இருந்து வெளியே வருகிறார்

நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. மூன்று வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளிவர உள்ளார்.

பிப்ரவரி 19ஆம் தேதி நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கினார். அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "என்மீது புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எனவே, என் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தது தவறானது என்று குறிப்பிட்டிருந்தார்.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா! சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கில் முன்ஜாமீன்! கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சசிகலா! சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த வழக்கில் முன்ஜாமீன்!

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

நரேஷ்குமாரின் மருத்துவ அறிக்கையிலும் அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காயமடைந்ததாக கூறப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிபந்தனை ஜாமின்

நிபந்தனை ஜாமின்

இதனையடுத்து, கடும் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் போலீஸில் இரு வாரங்கள் புதன், வெள்ளிகிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கு

நில அபகரிப்பு வழக்கு

இந்நிலையில் தற்போது முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் மீது அண்மையில் நில அபகரிப்பு வழக்கு பதியப்பட்டு, கைது செய்யப்பட்டார். கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியது, திமுக பிரமுகரை தாக்கியது ஆகிய வழக்குகளில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக நில அபகரிப்பு வழக்கு போடப்பட்டு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

3வது வழக்கில் நிபந்தனை ஜாமின்

3வது வழக்கில் நிபந்தனை ஜாமின்

இந்நிலையில் அந்த இரண்டு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், நில அபகரிப்பு வழக்கில் ஜாமின் மனுவை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் அவர் மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

காவல்துறை எதிர்ப்பு

காவல்துறை எதிர்ப்பு

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதேசமயம் ஜெயக்குமாருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என புகார்தாரர் மகேஷ்குமார் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோகுல், கடந்த ஆட்சி அதிமுக ஆட்சி என்பதால் சரியாக விசாரிக்க வில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டார் என்றும் எனவே ஜாமீன் வழங்க கூடாது என்று எடுத்துப் எதிர்ப்பு தெரிவித்தார்.

சிறையில் இருந்து வெளியே வரும் ஜெயக்குமார்

சிறையில் இருந்து வெளியே வரும் ஜெயக்குமார்

புகார்தாரர் தரப்பிலும் ஜாமின் வழங்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் அங்கு உள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்து போட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மூன்று வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி

வழக்கின் பின்னணி

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை எழுந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்தார். இந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Chennai High Court has granted conditional bail to former minister Jayakumar, who was arrested on a Rs 5 crore land grab charge. He is due to be released from jail soon as he has been granted bail in all three cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X