சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் இனி அரிசியுடன் சேர்த்து மாஸ்க்கும் ஃப்ரீ!.. கார்டுக்கு ரெண்டு.. தொடங்கியது திட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மாஸ்க் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே இந்த வைரஸில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும்.

Free Mask

இந்த நிலையில் மாஸ்க் போடாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவராலும் விலை கொடுத்தும் வாங்க முடியாததாலும், அபராதத்தையும் செலுத்த முடியாததாலும் இலவச முகக் கவசங்களை வழங்கலாம் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு இரு மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் புதிதாக பாதித்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்கா 24 மணி நேரத்தில் புதிதாக பாதித்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்கா

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத் தக்க 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன. இவற்றை துவைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

English summary
Free masks will be distributed from Ration Shops today in Tamilnadu. Each cardholder will get 2 reusable masks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X