லட்சுமி ராமகிருஷ்ணன் "உடைத்த பிறகும்" அன்னபூரணி காலில் விழுவது ஏன்? பெருகும் போலிகள்.. என்ன உளவியல்?
சென்னை: ''அன்னபூரணி அம்மா ஆசி வழங்குகிறார்.. திரளாக வாருங்கள்..அம்மா அவதரித்து விட்டார்'' என கடந்த வாரம் சமூகவலைதளங்களில் இந்த செய்திதான் ஹாட்டாபிக். செங்கல்பட்டு மாவட்டத்தில் அம்மா ஆடி.. சாரி ஆசி வழங்குகிறார் என்ற செய்தியும் பரப்பப்பட்டது. திடீர் திடீரென அவர் விடியோக்கள் வைரலாகிக் கொண்டிருந்தது.
அம்மா... மீண்டும் சாரி.. அன்னபூரணி காரில் இருந்து இறங்கி நடந்துவர, அவர் நடப்பதற்காகவே பூக்கள் தூவப்பட்டது. அந்தப்பூவில் மெதுவாக கைகளைத்தூக்கி மெதுவாக நடந்துவந்தார். அவருக்காகவே அமைக்கப்பட்ட பெரிய நாற்காலியில் அமர்ந்து, ஆசி வழங்கத்தொடங்கினார்.
அம்மா..அம்மா என அங்கிருந்த எல்லோரும் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டிருந்தனர். இதை வீடியோவில் பார்க்கும் நமக்கே சற்று வித்தியாசமாக இருந்தது. முதல் வீடியோ பார்க்கும்போதே, அன்னபூரணியை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பார்த்த நியாபகம்.
கள்ளக்காதல் விவகாரத்தில் சிக்கி நிகழ்ச்சியிலேயே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இவரை கிழித்துத் தொங்கவிட்டிருந்தார். காலங்கள் கடந்தபிறகு அதே அன்னபூரணி இப்போது ஆதிபராசக்தி அவதாரம் எடுத்திருக்கிறார். நம்மில் சிலரும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற வரிசையில் காத்திருக்கிறோம்.

யார் இந்த அன்னபூரணி
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்தவர் அன்னபூரணி. கடந்த 2014-ல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கணவருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, இன்னொரு நபருடன் வாழ்ந்து வந்தார். அவருடைய குடும்பமும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் வந்து கதறியதைப் பார்த்திருப்போம். அப்பாவை மீண்டும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என அவருடைய குழந்தைகள் கதறியபோது அங்கே அன்னபூரணி அமைதியாகத்தான் இருந்தார்.

அன்னபூரணியின் கணவர்
இதனிடையே அவரின் கணவர் இறந்து போகவே, 2016ல் அவரின் சிலையை பிரதிஷ்டை செய்து அறக்கட்டளை ஒன்றை துவங்கி, இயற்கை ஒலி மூலம் பயிற்சிகள் கொடுத்து வந்தார். கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அன்னபூரணியின் தரிசன நிகழ்ச்சிகளும் இதற்கு முன்பாக நடந்துள்ளதாம். அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் தனியாக யூட்யூப் பக்கம், பேஸ்புக் பக்கம் உள்ளிட்டவற்றை உருவாக்கி ஏராளமான பக்தர்களும் அவர்களை பின்பற்றி வருவதை காண நேர்ந்தது. இப்போது சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி, செங்கல்பட்டில் ஆசி வழங்கும் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார். ஆனால் அதை காவல்துறை நடத்தவிடவில்லை.

ஆதிபராசக்தியா இவர்
ஆதிபராசக்தியின் அடுத்த உருவம் நானே என கூறி, வைப்ரேஷன் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தால் எப்படி தூக்கி தூக்கிப் போடுமோ அப்படி குதித்துக் கொண்டே அருள் வாக்குக் கொடுக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் வரிசையில் காத்திருந்து ஆசி வாங்குவது போல வீடியோ அடுத்தடுத்து வெளியாகி வருவதை நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, அன்னபூரணியின் சுயரூபத்தை ஏற்கெனவே உலகுக்குக் காட்டியது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியிலேயே அன்னபூரணியை வெளுத்திருப்பார். இப்போது அன்னபூரணி சாமியாராகி அருள்வாக்கு சொல்கிறார். ''அன்னபூரணியின் வீடியோக்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு சிரிப்புதான் வருது. அதேசமயம், மக்கள் ஏமாந்துப் போறாங்களேன்னு மனசு ரொம்ப கஷ்டமாவும் இருக்கு. அன்னபூரணி பன்றது ரொம்ப தப்பு. மக்களை ஏமாற்றுவது ஒப்புக் கொள்ள முடியாது . யாராக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எந்த பிரச்சனையையும் சரிசெய்யலாம். இப்படி தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத நபர் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றினால் அதை நம்ப வேண்டாம்'' என அன்னபூரணி குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்திருக்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

அன்னபூரணி சொல்லும் காரணம்
இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மீக தீட்சை கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார் அன்னபூரணி. அவரை சமூகவலைதளங்களில் கேலி செய்தவர்கள் மீது புகாரும் அளித்திருக்கிறார். ''போலி சாமியார் என என்னைப் பற்றி பொய்யாக கூறி வருகிறார்கள். ஆன்மிக பணி செய்வதற்காக வந்திருக்கிறேன். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு என்னை பற்றி தெரியாது , உணர்ந்தவர்களுக்கு மட்டுமே என்னைப் புரிந்துகொள்ள முடியும்.

நான் சாமியா
நான் சாமி என்று கூறவில்லை. என்னிடம் ஆன்மீக பயிற்சி பெற்றவர்கள் தான் என்னை கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். ஆன்மீகம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, எந்த சக்தி இயக்குகிறது என்பதை உணர்த்தும் ஆன்மீக பயிற்சி மட்டுமே வழங்கி வருகிறேன். அருள்வாக்கு தரவில்லை. ஆன்மீகப் பணியை தொடர்ந்து செய்வேன். இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் நிலைநாட்டும்'' என்று அன்னபூரணி தெரிவித்திருக்கிறார்.

ஆன்மிகம் தான் நோக்கமா
அன்னபூரணியைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய குறிக்கோள் என்ன, எதற்காக சாமியார் அவதாரம் எடுக்கிறார்கள், உண்மையிலேயே ஆன்மிகத்தைப் பரப்புவதுதான் இவர்கள் நோக்கமா என்பதை நாம் தான் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து போலிச் சாமியார்களிடம் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்களை நினைத்து பாவமாகவே இருக்கிறது.

போலி
மக்களுடைய நம்பிக்கை தான் அவர்களுடைய முதல் பல. அதை சம்பாதித்துவிட்டால் காசு பணம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த மாதிரி சாமியார் கலாச்சாரம் இப்போது தொடங்கியது கிடையாது. சாய்பாபா காலம்தொட்டே இது நடக்கிறது.ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போல ஆக நினைத்து, கடைசியில் போலி சாமியார்களாக சுருங்கிப் போனவர்கள் தான் இவர்கள். அவர்களில் பலர் போலி என்பதை காலமே காட்டிக்கொடுக்கும்.

நோக்கம்
திடீர் சாமியார்களின் நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது மக்களின் நம்பிக்கயைப் பெற்று, அதை அவர்கள் வேறு விதத்தில் அறுவடை செய்கிறார்கள். சிலர் காசாக மாற்றுவார்கள். சிலர் அரசியலில் நுழைவார்கள். பலர் மறைமுகமாக அரசாங்கத்தையே நடத்துவார்கள். இதெல்லாம் நடந்தது, நடந்தும் கொண்டிருக்கிறது. இல்லாத மரத்துக்கு காசு வாங்கும் சாமியார்கள் தொடங்கி வாயிலிருந்து பொருள் எடுக்கும் சாமியார்கள் என வகை வகையாக இருக்கிறார்கள். நாம் தான் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்கிறார் பியூஷ்.

அன்னபூரணி மட்டும் தான் தவறு செய்தாரா
ஆதிபராசக்தி அவதாரமாக சொல்லிக்கொள்ளப்படும் அன்னபூரணி ஏற்கெனவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் குட்டுப்பட்டவர் தானே, அவரை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என பியூஷிடம் கேட்டதற்கு, ''அன்னபூரணி மட்டும் தான் எக்ஸ்போஸ் ஆனவரா.. மற்ற சாமியார்கள் எல்லாம் நல்லவர்களா?'' என பதில் கேள்வியோடே தொடர்ந்தார்.

ஆதிபராசக்தி முதல் பராசக்தி வரை
''சாய்பாபா பற்றி எல்லோருக்கும் தெரிந்தது தான், ஜக்கி காட்டையே அழித்து, நடாத மரத்துக்கு காசு வாங்கிறார். அவருடைய மனைவி எப்படி இறந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் அவரை நம்புகிறோமே. கைலாசா என்ற நாடே இல்லை, ஆனால் நித்தியானந்தா எல்லோரையும் நம்பவைக்கவில்லையா.. இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். தெரிந்திருந்தே இவர்களை ஏற்றுக்கொள்கிறோம். அப்படித்தான் அன்னபூரணியும். அவருக்கென ஒரு கூட்டத்தை அவர் உருவாக்கி வருகிறார். போலிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டும்தான் இதையெல்லாம் தடுக முடியும்'' என்கிறார் பியூஷ் மனுஷ்.

மக்கள் செய்யவேண்டியது
போலி சாமியார்கள் எனத்தெரிந்தும் மக்கள் தொடர்ந்து இவர் போன்றோரிடம் செல்வதற்கு என்ன காரணம் என மனநல மருத்துவர் பூங்கொடி பாலாவிடம் "ஒன்இந்தியாவுக்காக" பேசினோம். ''சாதாரண காய்ச்சல் வந்தால் இரண்டு நாளில் சரியாகிவிடும். காய்ச்சல் வந்த மறுநாளே மருத்துவரைப் போய் பார்ப்போம். மறுநாள் காய்ச்சல் சரியாகும். அந்த மருத்துவருக்குப் பாராட்டு கிடைக்கும். இதுதான் இதுபோன்ற பிரச்சனைகளில் நடக்கிறது.

நம்பிக்கை
மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிலர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவார்கள். சிலர் சாமியார்களிடம் சென்று பிரச்சனைகளைக் கூறி ஆலோசனைக் கேட்பார்கள். அதற்கு அவரும் ஏதோ சொல்ல, எதேச்சையாக அது நடக்க, உடனே மக்களும் அவர்களை நம்பத் தொடங்குவார்கள். அந்த நம்பிக்கை, பாத பூஜையில் தொடங்கி அவர்களை அடிமையாக மாற்றுவது வரை நடக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு, அவர்களாக திருந்தவேண்டும். இல்லை என்றால், அந்த சாமியார் எவ்வளவு தப்பு செய்திருந்தாலும், மக்கள் அவரை கடவுளாகத்தான் பார்ப்பார்கள்.
Recommended Video

பெண்கள் கூட்டம் ஏன்
சாமியார்களிடம் ஆண்களை விட பெண்கள் செல்வதற்கு அதிகக் காரணம் குடும்பச் சூழல் தான். நமக்கிருக்கும் பிரச்சனை எப்படியாவது சரியாக வேண்டும். அதற்கு மனநல ஆலோசகரைப் பார்க்க அவர்களுக்கு காசு இருக்காது, அல்லது விருப்பம் இருக்காது. கோயில் சாமியார் என்று சென்றால் தேவையில்லாத கேள்விகளைத் தவிர்க்கலாம், மேலும் காசு கேட்க மாட்டார்கள் என்ற நினைப்பில்தான் வீட்டுப் பெண்கள் சாமியார்களிடம் செல்வது. ஆண்களோ அலுவலகம் வெளி உலகம் என நிறைய மனிதர்களை சந்திப்பதால், சாமியார்களிடம் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை குறைவு தான்'' என்கிறார் மன நல மருத்துவர். இதையெல்லாம் பார்க்கும்போது, திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது. ''கடவுளை நம்பு.. ஆனா, நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு, அவன மட்டும் நம்பாத'' - இதுதான் அந்த வசனம். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால், எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் நாம் கவலைப்பட வேண்டாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications