சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டெல்லிக்கு முழு ஆக்சிஜன் கோட்டா".. மத்திய அரசுக்கு நாளை காலை வரை கெடு.. உச்ச நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி; டெல்லிக்கு முழு ஆக்சிஜன் கோட்டா அளவான 700 மெட்ரிக் டன்னை வழங்கிட வேண்டும். இதற்காக திட்டத்தை நாளை காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்திய தலைநகர் டெல்லி கடுமையாக திணறி வருகிறது. இதுவரை ஆக்சிஜன் இல்லாமல் டெல்லியில் மட்டும் அதிகாரபூர்வமாக 40 பேர் பலியாகி உள்ளனர்.

ஆனால் உண்மையான பலி எண்ணிக்கை 40 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏற்படும் இந்த மரணங்களுக்கு போதிய அளவு ஆக்சிஜனை, மத்திய அரசு டெல்லிக்கு வழங்கவில்லை என்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு ஜிஹெச் 'களேபரம்'.. 13 பேர் மரணத்துக்கு 'ஆக்சிஜன்' காரணமல்ல - ஆட்சியர்செங்கல்பட்டு ஜிஹெச் 'களேபரம்'.. 13 பேர் மரணத்துக்கு 'ஆக்சிஜன்' காரணமல்ல - ஆட்சியர்

உத்தரவு

உத்தரவு

டெல்லக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், மத்திய அரசோ 499 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் நேற்று டெல்லி ஹைகோர்ட் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

அதில் டெல்லிக்கு மத்திய அரசு கண்டிப்பாக ஆக்சிஜனை கொடுக்க வேண்டும். என்ன நடக்குமோ தெரியாது.. ஏதாவது செய்து ஆக்சிஜனை வழங்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு மத்திய அரசு ஆக்சிஜனை வழங்க வேண்டும். 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனையும் டெல்லிக்கு வழங்க வேண்டும், என்று உத்தரவிட்டது.

கோபம்

கோபம்

இதில் மிகவும் கோபம் காட்டிய டெல்லி ஹைகோர்ட், எங்களின் உத்தரவை உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு எதிராக ஹைகோர்ட் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும். எங்களுக்கு ஒத்துழைக்கு வழங்கவில்லை என்று கைது செய்ய உத்தரவிட நேரிடும், என்று கூறி மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நெருக்கடி கொடுத்தது.

முறையீடு

முறையீடு

இந்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சந்திரசூட், எம் ஆர் ஷா முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இதில் மத்திய அரசு சார்பாக சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார். அதேபோல் டெல்லி அரசு சார்பாக வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா ஆஜரானார்.

ஆஜர்

ஆஜர்

இந்த வழக்கில் மத்திய அரசு தனது வாதத்தில், அதிகாரிகளை, மத்திய அரசு நிர்வாகிகளை சிறை வைப்பதால் டெல்லிக்கு ஆக்சிஜன் கிடைக்காது. டெல்லிக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கும் பணிகளை செய்து வருகிறோம். இந்தியாவில் இருக்கும் மொத்த ஆக்சிஜனை பிரித்து கொடுத்து வருகிறோம்.

பார்முலா

பார்முலா

மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜனை பிரித்து கொடுக்கிறோம். இதற்காக பார்முலாவை பயன்படுத்துகிறோம். இப்படி இருக்கும் போது அதிகாரிகளை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் உத்தரவிடுவது தவறு என்று, மத்தியஅரசு வாதம் வைத்தது. இதை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஆக்சிஜன் தேவை ஒவ்வொரு முறையும் மாறும். கொரோனா பீக் ஒவ்வொரு முறையும் வேறுபாடும்.

ஒரே பார்முலா

ஒரே பார்முலா

ஒரே பார்முலாவை எப்போதும் பயன்படுத்த கூடாது. ஒரே அளவு ஆக்சிஜனை எப்போதும், பிரித்து கொடுக்க முடியாது. தேவைக்கு ஏற்றபடி அளவை மாற்ற வேண்டும். அதே சமயம் மற்ற மாநிலங்களும் அவதிப்பட கூடாது. டெல்லியின் ஆக்சிஜன் தேவையை தீர்க்க முடிவுகளை எடுக்க வேண்டும். டெல்லிக்கு முழு ஆக்சிஜன் கோட்டா அளவான 700 மெட்ரிக் டன்னை வழங்கிட வேண்டும்.

டெல்லி ஹைகோர்ட்

டெல்லி ஹைகோர்ட்

டெல்லிக்கு முழு ஆக்சிஜன் திட்டத்தை நாளை காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மும்பை மாநகராட்சி செயல்பட்டது எப்படி என்று மத்திய அரசும், டெல்லி அரசும் பார்த்து பாடம் கற்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Arresting officials won't help Delhi in Oxygen Shortage says Union Government in SC.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X