வேளச்சேரி மேம்பாலத்திற்கு அடியில் அற்புதமான மாற்றம்.. பொதுமக்கள் வரவேற்பு
சென்னை: சென்னையில் திரும்பிய பக்கம் எல்லாம் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னையை மேம்பாலங்களின் நகரம் என்று சொல்லலாம்.. அந்த அளவிற்கு மேம்பாலங்கள் அதிக அளவில் உள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களைக் காட்டிலும் சென்னைதான் அதிக எண்ணிக்கையிலான மேம்பாலங்கள் இருக்கிறது. மேம்பாலங்கள் ஒருபுறம் எனில், மேம்பாலத்திற்கு அடியில் உள்ள காலி பகுதியில் சூப்பரான மாற்றங்கள் தற்போது வரத்தொடங்கி உள்ளது. வேளச்சேரி மேம்பாலத்திற்கு அடியில் அற்புதமான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விஷயத்தில் மற்ற நகரங்களைவிடவும் சற்று வித்தியாசமான நகரமாக சென்னை இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களைக் காட்டிலும் சென்னையில் தான் அதிக எண்ணிக்கையிலான மேம்பாலங்கள் இருக்கிறது.இந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 42க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பல மேம்பாலங்களின் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரயில் தண்டவாளங்களை கடப்பதற்காக சென்னை முழுக்க பாலங்கள் உள்ளன. அதேபோல் முக்கிய சிக்னல்கள் அனைத்திலும் தற்போது மேம்பாலங்கள் உள்ளன.

ஜெமினி (அண்ணா மேம்பாலம்), கத்திப்பாரா, கோயம்பேடு மேம்பாலம் ஆகியவை மிக மிக முக்கியமான மேம்பாலங்களாக உள்ளன. ஒவ்வொரு மேம்பாலமும் மிகப்பெரிய ஜங்கசன் போல் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுகின்றன. இதுதவிர போரூர் மேம்பாலம், மேடவாக்கம் மேம்பாலம், வேளச்சேரி மேம்பாலம், பள்ளிக்கரணை மேம்பாலம் போன்றவையும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் முக்கியமான பாலங்களாக உள்ளன.
இந்த மேம்பாலங்களுக்கு அடியில் காலியாக உள்ள இடங்களை அரசு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. அந்த வகையில் கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் பூங்காக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், குழந்தைகளுக்கான நவீன விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
நடைபயிற்சி செய்வதற்கான பாதைகள் மற்றும் மக்கள் ஓய்வெடுக்கும் வகையில் அழகிய பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு கடைகள், சில 24 மணி நேரமும் இயங்கும் வசதிகளுடன் இங்கு இருக்கின்றன. அதேபோல் பேருந்துகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் இருக்கிறது.
சென்னையின் மற்ற பல்வேறு மேம்பாலங்களின் அடியில் சிறிய அளவில் விளையாடடு திடல் மற்றும் உடற்பயிற்சி வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேளச்சேரி மேம்பாலத்திற்கு அடியில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4.45 கோடி செலவில் திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு திடல்கள் வடிமைக்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய இடத்திலும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு பூங்காவை மற்ற மேம்பாலங்களிலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications