Gold price: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
சென்னை: ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறையான இன்று தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1800 உயர்ந்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று (பிப்.28) அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பெய்தது.

ஈரானின் உச்ச தலைவர் கமேனி தங்கியிருக்கும் மாளிகை மீது இந்த தாக்குதல் நடந்தது. இதில் வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இதை உறுதி செய்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்து ஒரு வாரத்திற்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நடந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலைக்கே தங்கம், வெள்ளி விற்பனையாகும். ஆனால் இன்றைய தினம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலால் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ 1800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,26,200-க்கும், கிராமுக்கு ரூ 225 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 15,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து, கிராம் ரூ 325-க்கும், கிலோவுக்கு ரூ 3,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 7000 உயர்ந்துள்ளது. இதுகுறித்து தங்க நகை வணிகர் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியிருப்பதாவது: இந்த விலை உயர்வு முழுக்க முழுக்க ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்தான்!
இந்த போரால் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பும் ஏற்படும் என்ற நோக்கிலும் பணத்திற்கு மாற்றாக தங்கத்தின் மீது முதலீடுகள் உயர்ந்து வருவதும், வரும் காலங்களில் தங்கத்தின் மீது முதலீடுகள் பெரிய அளவில் உயரும் என்ற நோக்கத்திலும் தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது.
போரின் சூழலை பொருத்து தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போரில் ஈரானை தனிமைப்படுத்த விடமாட்டோம். நாங்களும் இந்த போரில் இறங்குவோம் என ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அது மேலும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சூழல் உள்ளதால் இன்னும் தங்கம், வெள்ளி விலை பெருமளவில் உயரும்.
ரஷ்யா, சீனா அறிவிப்பால் உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே வரும் நாட்களில் தங்கம், வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் தங்கம் விலை உயர்ந்துக் கொண்டே வருகிறது. தற்போது மேலும் உயரும் என ஜெயந்திலால் சலானி சொல்லியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications