’தமிழ்நாடு’ பெயரை மாற்ற சொல்லலையே! எனது பேச்சை தப்பாக புரிஞ்சுகிட்டாங்க! ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்
சென்னை : காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பை குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன் எனவும், எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கம் விழா தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது சரியாக இருக்கும் என கூறியதாக குற்றம் சாட்டி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடுமையான கண்டனங்களை முன்வைத்தன.
ஏற்கனவே ஆளுநரை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பலத்த கண்டனங்களை பெற்றது. மேலும் ஆளுநருக்கு தமிழக சட்டசபையிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது..

பரபரப்புகள்
இதற்கிடையே 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

புகார்
ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சபை மாண்பை ஆளுநர் புறக்கணித்ததாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்சி வருகின்றன. இந்த விவகாரம் தமிழக மட்டுமல்லாது தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆளுநர் டெல்லிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் விளக்கம்
இந்நிலையில் எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வது தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,""2023 ஜனவரி 4-ஆம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த "காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும்' ஒரு மாத காசி தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டும் நிகழ்ச்சி' நடைபெற்றது.

'தமிழகம்'
அந்நிகழ்வில் வரலாற்றுப் பண்பாடு பற்றிப் பேசும் போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, 'தமிழகம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்தக் காலத்தில் 'தமிழ்நாடு' என்பது இருக்கவில்லை. எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில், 'தமிழகம்' என்பதை 'மிகவும் பொருத்தமான வெளிப்பாடு' என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

தவறானது
கண்ணோட்டத்தை 'தமிழ்நாட்டின் பெயரை எனது மாற்றுவதற்கான பரிந்துரை போல' பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்." எனது பேச்சின் அடிப்படை புரியாமல், ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை' எனும் வாதங்கள், விவாதப்பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்" எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக ஆளுநர் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வைத்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications