"டெல்லி" பறக்கும் எடப்பாடி.. ஏகப்பட்ட "ஓட்டைகள்".. காரணமே 2 புள்ளிகள் தானாம்.. புலம்பும் அதிமுக
எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு தொடர்பான சட்டசிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: ஓபிஎஸ் நீதிமன்றத்தையே கடைசி வரை நம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளார். இந்த விவகாரம் குறித்து, அதிமுக நலன்விரும்பிகள் சில விஷயங்களை மனம்விட்டு பேச ஆரம்பித்துள்ளனர்.
அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது..
Recommended Video
அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது..

பட்டென சொன்ன எடப்பாடி
மற்றொரு பக்கம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், இந்த பதவி செல்லாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது, ஓபிஎஸ் தரப்பினருக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது... அப்பீலுக்காக சுப்ரீம் கோர்ட் போயுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இதன் தீர்ப்பு என்னவாக வரப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி சொல்லும்போது, அந்த உத்தரவை ஒரு தீர்ப்பாக பார்க்கவில்லை.. தனி நீதிபதியின் கருத்து என்பதுபோல எடப்பாடி சொல்லி வருகிறார்..

எக்கச்சக்கம்
மேலும், சுப்ரீம்கோர்ட் என்ன சொல்கிறதோ, ஏற்போம் என்றும் சட்டத்திற்கு உட்பட்டும் பேசியுள்ளார்.. இந்த விவகாரத்தை பொறுத்தவரை, 2 விஷயங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.. ஒன்று, ஓபிஎஸ்ஸுக்கு போதுமான ஆதரவு இல்லை என்றாலும், சட்டதிட்டங்களின்படியே செல்வதாக கூறப்படுகிறது. மற்றொன்று, எடப்பாடிபழனிசாமிக்கு மெஜாரிட்டி ஆதரவு இருந்தாலும், சட்டசிக்கலில் எக்கச்சக்கமாக சிக்கி உள்ளார் என்கிறார்கள்.. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகின்றன..

மிஸ்டேக்குகள்
முதலாவதாக, சிவி சண்முகம்தான் இந்த பிரச்சனை இவ்வளவு வெடிக்க காரணம் என்றும், சட்டத்துறையாக அமைச்சராக பணியாற்றியும்கூட, சில இடங்களில் அவர் கோட்டைவிட்டதாகவும் கூறுகிறார்கள்.. பொதுக்குழு மட்டுமே எடப்பாடிக்கு அங்கீகாரம் தர வேண்டிய அவசியம் இல்லை.. பொதுக்குழு தீர்மானத்தை முன்வைக்காமலேயே, அந்த தீர்மானம் அங்கீகரிக்கப்படாமலேயே எப்படி காலியானது என்று சொல்ல முடியும்.. சிவி சண்முகம் செய்த மிகப்பெரிய தவறு இதுதான் என்கிறார்கள்..

காலி... காலி
இரண்டாவதாக, ஓபிஎஸ்ஸின் பதவி காலி என்று ஒரே ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து காலி செய்தது, கேபி முனுசாமி.. ஒரு சாதாரண தீர்மானத் தவைத்து, மாபெரும் கட்சியின் ஒரு தலைவர் பதவியை நிராகரிக்க முடியாது.. நகராட்சி, ஊராட்சி, ஒன்றியம் என அனைத்து பலங்களும் உள்ளதுதான் தலைவர் பதவி... சின்னம் முடங்குதோ இல்லையோ, இப்படி நிலை நீடித்தால் கட்சியே முடங்கிவிடும்.

வார்னிங்
மூன்றாவதாக, சட்டப்படி போனால் இவையெல்லாம் செல்லாது என்று, எடப்பாடி தரப்பினரிடம் அப்போத இதுகுறித்து அதிமுகவின் நலன்விரும்பிகள் எச்சரித்தார்களாம்.. அப்படி இருந்தும், அந்த பேச்சை எடப்பாடி டீம் காதில் போட்டுக் கொள்ளாமல், அமைதியாக இருந்துள்ளது என்றார்கள்.. இன்னொன்றையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.. 23ம் தேதி நடந்த பொதுக்குழு பற்றி நீதிபதி பேசவே இல்லை.. 16-ம் தேதி நடந்த பொதுக்குழு பற்றி மட்டுமே நீதிபதி பேசினார்.. அப்படியானால் ஒரு வருடத்துக்கு எத்தனை பொதுக்குழுவை கூட்டலாம்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.. இப்படி ஒரு கேள்வியை சுப்ரீம்கோரட்டில் எழுப்பினாலும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.

டவுட் + முணுமுணுப்பு
ஐந்தாவதாக, 22- தேதி நீதிமன்றம், இனிமேல் எந்த தீர்மானத்தையும் கூடுதலாக நிறைவேற்றக்கூடாது என்று உத்தரவிட்ட பிறகும்கூட, 20ம் தேதியே எடப்பாடி தரப்பில் எப்படி கையெழுத்து போட்டு தந்தார்கள்?
அடுத்த பொதுக்குழு எப்போது என்பதை இப்போதே அறிவிக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கடிதத்தில் கையால் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.. இந்த ஆவணங்களும் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.. தனக்கிருக்கும் மெஜாரிட்டி ஆதரவால், எதையும் செய்து விட முடியாது என்பதே இப்போது வரை எடப்பாடி நம்புகிறார்.. ஆனால், நிறைய சட்டசிக்கல் உள்ளது..

ஓட்டை
இந்த சட்டத்தில் ஓட்டையை போட்டதுக்கு காரணம், எடப்பாடி தரப்புதான்.. இவைகளில் இருந்து எப்படி அவர்கள், தங்களை நிரூபிக்க போகிறார்கள்? என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டும் வருவதால், நிச்சயம் ஏதாவது தீர்வு காண்பார்.. ஆனால், இவர்கள் 2 பேரும் இணைவது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் அதிமுகவின் நலன்விரும்பிகள்..!

தலையீடு
அதிமுகவை பொறுத்தவரை , பொதுக்குழு என்பது அதிகாரம் படைத்த அமைப்பாகவே இருந்தாலும், இந்திய அரசமைப்புக்கு அது ஒரு பொருட்டே இல்லை.. சட்டவழிகளை மட்டுமே நீதிமன்றம் முன்னெடுத்து செல்லும்.. பொதுக்குழுவுக்கு ஆதரவு இருக்கும்பட்சத்தில், இதில் நீதிமன்றம் தலையிட வாய்ப்பில்லை.. ஆனால், எதிர்ப்புகள் வலுவாகும்போது, நீதிமன்றம், நிர்வாகம் தலையிடும் சூழல் ஏற்படுவது இயல்பு.. அந்த வகையில், எடப்பாடிக்கும் சிக்கல்கள் சூழ்ந்தள்ளன.. நீதிமன்றங்கள் எந்த ஒரு உட்கட்சி விவகாரத்திலும் தலையிடாவிட்டாலும், விதிகள் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றங்கள் அங்கே தங்களுடைய கடமையை செய்யும்.. இங்குதான் எடப்பாடி விதிகளை மீறியுள்ளதாக புகார்கள் வெடித்து கிளம்பின.

குளறுபடி முடிச்சுகள்
ஹைகோர்ட்டில் எடப்பாடி தரப்பிடம் நீதிபதி கேள்விகளை எழுப்பியிருந்ததும், இதன் அடிப்படையில்தான்.. கடந்த ஜுன் 23-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் என்பது விதிகளின்படி முறைப்படி கூட்டப்பட்டது என்பதில் சந்தேகமில்லை... ஜூலை 11-ம் தேதி, நடந்த பொதுக்கூட்டமானது, பலவித குளறுபடிகளை தாங்கி வந்துள்ளதாக கருதப்படுகிறது.. இந்த பொதுக்கூட்டம் தகுந்த நபரால் அறிவிக்கப்பட்டதா? பொதுக்குழுவுக்கு கால அவகாசம் தரப்பட்டதா? பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள், அனைவருமே பொதுக்குழு உறுப்பினர்கள்தானா? என்ற பல சட்டச்சிக்கல்கள் சூழ்ந்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications