"குருமூர்த்தி" வீசிய வெடி.. அமித்ஷா காதில் கிசுகிசுத்து.. கலங்கும் எடப்பாடி டீம்.. அந்த 10 நிமிடம்?
குருமூர்த்தி, அமித்ஷாவிடம் முக்கிய தகவல் ஒன்றை பரிமாறிக் கொண்டாராம்
சென்னை: அமித்ஷாவின் சென்னை வருகையானது பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. அது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாஜக இந்த முறை தமிழகத்தை குறி வைத்தே தன்னுடைய தேர்தல் பிளானை நடத்தி வருகிறது.. காரணம், நம் நாட்டில் உள்ள 31 மாநிலங்களில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது...
இதில், 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது... மற்ற மாநிலங்களில் குறிப்பாக அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில்தான், ஆபரேஷன் தாமரை கையில் எடுக்கப்பட்டுள்ளது..

ஸ்கெட்ச்
தென்மண்டலத்தில் 10 தொகுதிகளை குறிவைத்துள்ள நிலையில், அதற்கான வியூகமும் வகுக்கப்பட்டு வருகிறது.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்கள், கோவை, திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்கள் என 25 மக்களவை தொகுதிகளை குறிவைக்க திட்டமிட்டுள்ளனர்... இதற்கான பொறுப்பாளர்கள் நியமனம் முதல் பிரச்சார வியூகம் வரை ஸ்கெட்ச் போடப்பட்டு வருகின்றன. மேற்கு மண்டலத்துடன் ஒப்பிடுகையில், தென்மண்டலங்களில் செல்வாக்குகள் அவ்வளவாக பாஜகவுக்கு இல்லை.

டிடிவி டீல்
இந்த தென்மண்டலங்களில் வாக்குகளை கணிசமாக பெறுவதற்கு ஓபிஎஸ், + டிடிவி இருவருடைய பங்களிப்பும் பெருமளவுக்கு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. எனவேதான், பாஜக தலைவர்கள் தென்தமிழகத்துக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.. 4 நாட்களுக்கு முன்பு, பிரதமர் மோடியும் சரி, அமித்ஷாவும் சரி, ஓபிஎஸ்ஸையும், எடப்பாடியையும் தனியாக அழைத்து பேசவேயில்லை.. ஓபிஎஸ் தங்களின் அபிமானி என்றாலும்கூட, அவரைகூட, தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச மேலிடம் டைம் ஒதுக்கவில்லை.. பாஜக தலைவர்கள் நினைத்திருந்தால், எடப்பாடி & ஓபிஎஸ்ஸை தனித்தனியாகவே ஏர்போர்ட்டிலேயே சந்தித்து பேசியிருக்க முடியும்..

10 நிமிஷம்
ஆனால், ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்பதை அழுத்தமாக வலியுறுத்தவே, இவ்வாறு தனித்தனியாக பேசிவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக இன்னொரு முக்கிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.. கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட அமித்ஷாவை, ஆடிட்டர் குரு மூர்த்தி தனியாக சந்தித்து பேசினாராம்.. கிட்டத்தட்ட இருவரும் 10 நிமிடங்களுக்கும் மேல் பேசியதாக சொல்கிறார்கள்.. இவர்கள் தனியாக பேசினாலும்கூட, அப்போதும் அதிமுக இணைப்பு பற்றிதான் பேசினார்களாம்..

குருமூர்த்தி
இதில் குருமூர்த்தி சில விஷயங்களை அமித்ஷாவிடம் எடுத்து சொன்னாராம்.. அதிமுக ஒன்றுபட வேண்டும், ஓபிஎஸ் அதிமுகவில் இருப்பது கட்சி ரீதியாக பலம் பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாஜகவுக்கும் சாதகமாக இருப்பார் என்றாராம்.. இதே கருத்தைதான், பல்வேறு பாஜக தலைவர்களும் அமித்ஷாவிடம் சொல்லி உள்ளனர்.. இதையெல்லாம் கேட்ட அமித்ஷா, கட்சி நிர்வாகிகளிடம் 'பூத்' அடிப்படையில் இப்போதே பணியை தீவிரப்படுத்துங்கள்... குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் மறுபடியும் இங்கே வருகிறேன். அப்போது தொடர்ந்து விவாதித்து செயல்திட்டங்களை வகுக்கலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

மாறுகிறது ரூட்
அதிமுக ஒன்றுபடாவிட்டால் ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி தரப்பை தோற்கடிப்பதற்கான வேலைகளை செய்யும்.. சட்டமன்ற தேர்தலில் டிடிவி. தினகரனால் சில தொகுதிகளில் அதிமுக தோற்றதை போல் எம்பி தேர்தலிலும் அதுபோலவே நடந்தால், அது பாஜகவுக்குதான் பலவீனத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக எழ துவங்கி உள்ளது.. அதனாலேயே எடப்பாடி + ஓபிஎஸ் இணைய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தெரிகிறது.. எனினும், கட்சியை பெருமளவுக்கு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் வற்புறுத்தலை ஏற்பாரா? வேறு ரூட்டை போடுவாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications