8 மணி நேர கனமழை.. போக்குவரத்து நெரிசல்.. நடுவழியில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்..மொத்தமாக முடங்கிய சென்னை
சென்னை: சென்னையில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையின் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் இன்று 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
Recommended Video
கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம், என பல்வேறு நகர்ப்புற பகுதியிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டி வருகிறது.

மீண்டும் வெள்ளக்காடான சென்னை
இதனால் சென்னையின் பல இடங்களில் பிரதான சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் வீடுகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. கூவம் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னை நகர்புற பகுதிகள் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது.

போக்குவரத்து நெரிசல்
வெள்ளநீர் தேங்கியதால் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை மற்றும் ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கிண்டி, வடபழனி, எழும்பூர், ஆயிரம் விளக்குமயிலாப்பூர் ஆர்கே சாலை ராயப்பேட்டை என சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்கள் பரிதவிப்பு
1 கிலோ மீட்டரைக்கடக்க 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பணி முடிந்து இல்லம் திரும்புவோர் கடும் அவதி அடைந்துள்ளனர். மாநகர பேருந்து ஊர்ந்தபடியே செல்கின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றன. சில இடங்களில் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நகராமல் அப்படியே அணிவகுத்து நிற்கின்றன.

பணிகள் தீவிரம்
போலீசார், போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகர ஆணையர் சுகன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார். சுரங்கபாதை மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications