சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே ஆண்டில் ரூ.10.43 கோடி வருவாய்.. அசர வைத்த விஜயபாஸ்கர்.. முக்கிய பிரமுகர்கள் சொத்து ஒப்பீடு

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து வருடங்களில் 578 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சொத்து மதிப்பு 445 சதவீதம் உயர்ந்துள்ளது. அமைச்சர் சிவி சண்முகத்தின் சொத்து மதிப்பு 29.01 சதவீதம் உயர்ந்துள்ளது.

சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும்அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் சிவி சண்முகம், சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் நடிகை குஷ்பு மற்றும் கன்னியாகுமரி தொகுதி எம்பி தேர்தலில் போட்டியிடும் விஜயவசந்த் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களின் சொத்துமதிப்பு பட்டியல்களை இப்போது பார்ப்போம். இதில் அதிகபட்சமாக விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு அதிக அளவு உயர்ந்துள்ளது.

 ரூ.10.43 கோடி வருவாய்

ரூ.10.43 கோடி வருவாய்

விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பை இப்போது பார்ப்போம். அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடந்த 2016ம் ஆண்டு, 9.09 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது 576.68 சதவீதம் உயர்ந்து 61.51 கோடியாக உயர்ந்துள்ளது. இவருக்கு கடந்த 2019-2020ம் ஆண்டில் 10.43 கோடி வருவாய் வந்துள்ளதாக கூறியுள்ளார். அசையும் சொத்துக்கள் 37.93 கோடி என்றும். அசையா சொத்துக்கள் 23.58 கோடி என்றும், 9.09 கோடி கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் மற்ற எம்எல்ஏக்கள் யாருக்கும் ஒரே வருடத்தில் இவ்வளவு வருவாய் வந்துள்ளதா என்றால் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்த யாருக்கும் இல்லை என்பதே தகவலாக உள்ளது,.

6.49 கோடி சொத்து

6.49 கோடி சொத்து

மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் கே. ராஜுவின் சொத்து மதிப்பு கடந்த 2016ம் ஆண்டில் 1.19 கோடியாக இருந்தது. 2021ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 448.38 சதவீதம் உயர்ந்து 6.49 கோடியாக உயர்ந்துள்ளது. செல்லூர் ராஜூவுக்கு கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 40 லட்சம் ரூபாய் வருமானம் வந்ததாக கூறியுள்ளார். தனக்கு 3.09 கோடி அசையும் சொத்துக்களும், 3.4 கோடி அசையா சொத்துக்களும், 1.98 கோடி கடனும் உள்ளதாக கூறியுள்ளார்.

 3.38 கோடி சொத்து

3.38 கோடி சொத்து

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சொத்து மதிப்பு கடந்த 2016ம் ஆண்டில் 3.38 கோடியாக இருந்தது என்று கூறியிருந்தார். இப்போது 29.01 சதவீதம் அதிகரித்து 3.38 கோடியாக உயர்ந்துள்ளது. இவருக்கு 2.28 கோடி ரூபாய் அசையா சொத்துக்களும், 1.1 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2019-20ம் நிதியாண்டில் 11 லட்சம் வருவாய் வந்ததாக கூறியுள்ளார்.

41 கோடி சொத்து

41 கோடி சொத்து

பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு தனக்கு 41.2 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கு கடந்த 2016ம் ஆண்டில் இருந்த சொத்து மதிப்பு தெரியவில்லை. குஷ்புவுக்கு 34.57 கோடி ரூபாய் அசையா சொத்துக்களும், 6.63 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும், 4.01 கோடி ரூபாய் கடனும் உள்ளதாக கூறியுள்ளார்.

53 கோடி சொத்து

53 கோடி சொத்து

வசந்த் அன் கோ நிறுவனத்தின் உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜய் வசந்த், அவரது தந்தை வசந்தகுமார் எம்பியாக இருந்த கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு 53.23 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார். இவரும் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவதால் 2016ம் ஆண்டு சொத்து மதிப்பு தெரியவில்லை. விஜய் வசந்துக்கு கடந்த 2019-2020ம் நிதியாண்டில் 23லட்சம் வருமானம் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கு 12.04 கோடி அசையா சொத்துக்களும், 41.19 கோடி ரூபாய் அசையும் சொத்துக்களும் உள்ளதாக வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

English summary
here's a look at the declared income, assets and liabilites of some key candidates as compared to the last assembly election 2016. Minister Vijayabaskar's property value has risen by 578 percent in the last five years. Similarly, the property value of Minister sellur k Raju has gone up by 445 per cent. The property value of Minister CV Shanmugam has increased by 29.01 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X