உண்மையிலேயே ‘லெஜண்ட்’ தான்! அண்ணாச்சி அருள் சத்தமின்றி செய்த 3 சாதனைகள்! சூப்பர் ஸ்டார் கூட பண்ணலை!
சென்னை : லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் 'லெஜன்ட்' சரவணன் அருள் நடிப்பில் வெளியாகி உள்ள 'லெஜெண்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்துள்ள நிலையில் சப்தமின்றி தமிழ் சினிமா உலகில் மூன்று சாதனைகள் செய்துள்ளதாகவும், இதுவரை அதனை சூப்பர் ஸ்டார் ரஜினி கூட செய்யவில்லை என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.
இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்' படம் கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அண்ணாச்சி சரவணனுடன் நாயகியாக ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, மறைந்த நடிகர் விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் யூட்யூபில் மில்லையன்களை கடந்தது.

'தி லெஜண்ட்’
'தி லெஜண்ட்' உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. சுமார் 45 கோடி செலவில் உருவான 'தி லெஜண்ட்' உலக அளவில் முதல் வார முடிவில் 6 கோடி ரூபாயையும், மொத்த வசூல் 10 கோடியை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில பல சாதனை
படம் நன்றாக இருக்கிறது சுத்தமாக நல்லாவே இல்லை என கலவையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் தி லெஜன்ட் படத்தின் மூலம் அண்ணாச்சி சரவணன் அருள் சத்தம் இல்லாமல் தமிழ் சினிமாவில் சில பல சாதனைகளைப் படைத்திருக்கிறார். அண்ணாச்சிக்கு ஒரு மகள் இருப்பதும் அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததும் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் 50 வயதில் தமிழ் திரை உலகில் முதல் படத்திலேயே ஹீரோவாக அறிமுகமான முதல் நடிகர் நமது லெஜெண்ட் அண்ணாச்சி என்பதுதான் உண்மை. 50 வயதுக்கு மேல் ஹிரோவாக நடித்து வந்தாலும் 50 வயதுக்கு மேல் யாரும் முதன்முறையாக ஹீரோவாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி ஜோடி
தமிழ் திரையுலகை பொருத்தவரை ஏற்கனவே பல உலக அளவில் பட்டங்களை வென்ற அழகியுடன் நடித்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் உடன் பிரசாந்த் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும் அறிமுகமான முதல் படத்திலேயே உலக அழகியுடன் எந்த ஒரு சினிமா நடிகரும் இதுவரை நடித்ததில்லை அந்த வகையில் நம்ம அண்ணாச்சி அருள் அதிர்ஷ்டசாலி தான் அறிமுகமான முதல் படத்திலேயே உலக அழகி ஊர்வசி ராவ்டேலாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். அவருக்கு மட்டும் ஊதியம் 10 கோடி தரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

அதிக தியேட்டர்கள்
ஒரு அறிமுக நடிகருக்கு முதல் படமே 2500 தியேட்டர்களில் வெளியாகும் இதுவே முதல் முறை என்கின்றனர் விநியோகஸ்தர் தரப்பினர் ரஜினி விஜய் அஜித் படங்களுக்கு இணையாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 2,500 திரையரங்குகளில் தி லெஜெண்ட் திரைப்படம் வெளியான நிலையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூலித்தல் நிலையில் படத்தின் வெற்றி விழாவை கொண்டாடவும் அண்ணாச்சி தரப்பு தயாராகி வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications