கவலை வேண்டாம்.. காலேஜ் திறந்தாலும் ஆன்லைன்லதான் தேர்வு.. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
சென்னை: கல்லூரிகளில் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும்,
ஆன்லைன் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்று வந்தன.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 1 முதல் 20 தேதி வரை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

கொரோனா பரவல்
தற்போது கொரோனா பரவல் ஓமிக்ரான் என்ற பெயரில் 3வது அலையில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் உயர்கல்வித்துறை முதலில் அறிவித்திருந்த அறிவிப்புகளில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்ததாகவும் இதனை தொடர்ந்து முதல்வரின் உத்தரவின் பேரில் கல்வித்துறை செயலர் கல்வி துறை இயக்குநர்கள் துணை வேந்தர்கள் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்களும் கலந்து பேசியதன் அடிப்படையில் தேர்வுகள் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பள்ளி கல்லூரிகள் திறப்பு
இந்தநிலையில் 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக கல்லூரிகளில் நேரடியாக தேர்வுகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆன்லைன் தேர்வு
இதனிடையே ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது போல ஆன்லைன் மூலமே கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கொரோனா காரணமாக பிப்ரவரி 1ஆம் தேதி ஆன்-லைன் வழியாக நடைபெறும் என ஏற்கனவே உயர் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது எனவும், தற்போது கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமா என சந்தேகித்து கேள்வி எழுப்பியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் உறுதி
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உயர் கல்வித்துறை சார்பில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அப்போது கல்லூரிகளில் முதல் 3 மற்றும் 5 ஆம் பருவத்தில் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியாகவே நடைபெறும் என தெரிவித்தார் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆன்லைன் தேர்வுகள் முடிந்த பிறகு மாணவர்கள் கல்லூரிக்கு வரலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications